• Jan 19 2025

பிக் பாஸ் டைட்டில் வின்னர்களின் நிலை என்ன? காணாமல் போன முக்கிய பிரபலங்கள்!

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி இன்னும் ஒரு வாரத்தில் இறுதி பைனலுக்கு சென்று, டைட்டில் வின்னர் யாரென அறிவித்துவிடும்.

தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பிராந்திய மொழிகளிலும் பிக்பாஸ் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.

இதில் கலந்து கொண்ட பிரபலங்களுக்கு பிரபலத்தோடு சினிமாவில் நடிப்பதற்கான வாய்ப்பும் கிடைப்பதால், சினிமாவில் நடிக்க விரும்பும் நடிகர்கள் இந்த நிகழ்ச்சியில் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். 

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிரபலங்களில் சிலர் மட்டுமே சிறந்த புகழ் நிலையை அடைகின்றனர். சிலர் பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போதே தமது பெயரை கெடுத்துக் கொள்கின்றனர். பிக் பாஸ் டைட்டில் வென்ற போட்டியாளர்கள் சினிமாவில் அடுத்தகட்டத்துக்கு நகர்வார்கள் என நம்பப்பட்டது.


எனினும், இதுவரையில் இடம்பெற்ற 6 சீசன்களிலும் பங்குகொண்ட போட்டியாளர்கள், வெற்றியாளர்களில் பலர் சினிமாவில் எந்த இடத்தில் இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. சொல்லப்போனால் சினிமாவில் இருந்து காணாமல் போய்விட்டார்கள் என்று தான் சொல்லவேண்டும்.

முதல் சீசன் டைட்டில் வின்னர் ஆரவ், பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் ஹீரோவாக ஒரு படத்தில் நடித்தார். அப்படம் வெற்றியடையவில்லை. ஆனால் தற்போது விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார்.

பிக் பாஸ் சீசன் 2 வின்னர் நடிகை ரித்விகா மக்கள் மத்தியில் பெரிதளவில்  பிரபலமடையவில்லை. இதன்பின் பிக் பாஸ் சீசன் 3 வின்னர் முகன் ராவ் மற்றும் சீசன் 4 வெற்றியாளர் ஆரி அர்ஜுனன் இருவரும் முதன்மை ரோலில் நடித்த எந்த படமும் கடந்த ஆண்டுகளில் வெளிவரவில்லை.


பிக் பாஸ் 5 டைட்டில் வின்னர் ராஜு வீட்டிற்க்குள் நல்ல பொழுதுபோக்காளராக இருந்தார். ஆனால், இவர் நடிப்பில் எந்த ஒரு திரைப்படமும் வெளிவரவில்லை. அவரை பற்றியும் பெரிதளவில் தகவல் இல்லை.

அதே போல் தான் பிக் பாஸ் 6 டைட்டில் வின்னர் அசீம். பிக் பாஸ் வெற்றிக்கு பின் இவரும் என்ன செய்கிறார் என இதுவரை யாருக்கும் தெரியவில்லை.

இவ்வாறு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் மேலும் பிரபலம் அடையாளம், பட வாய்ப்புகள் குவியும் என்று எண்ணிய நட்சத்திரங்களின் பரிதாப நிலைமை தொடர்பில் சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாகியுள்ளது. 

இதேவேளை, பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரியோ, கவின், சாண்டி, தர்ஷன், ஷிவானி, ஹரிஷ் கல்யாண், ஜனனி  போன்றோர் சினிமாவில் ஜொலித்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement