தமிழ் சினிமாவின் நகைச்சுவை ஹீரோக்கள் பட்டியலில் தனி அடையாளம் படைத்தவர் நடிகர் பவர் ஸ்டார். இவர் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் தனது நகைச்சுவை மூலம் கவர்ந்துள்ளார். அத்தகைய பவர்ஸ்டார் பற்றி சமீபத்தில் வெளியான தகவல்கள் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பவர் ஸ்டார், செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போது நடிகர் விஜய் பற்றிக் கதைத்துள்ளார். அதன்போது அவர் “விஜயை களத்திற்கு வரச் சொல்லுங்க…அவர் எந்த தொகுதியில் நின்றாலும் நான் அவரை எதிர்த்து நிற்பேன்!" எனக் கூறியுள்ளார்.
இது வெறும் கருத்தல்ல, பவர் ஸ்டார் நீண்ட நாட்களாக அரசியலுக்குள் வரவேண்டும் என நினைத்ததைக் கூறுகின்றது. நடிகர் பவர் ஸ்டார், தமிழ் சினிமாவில் வில்லனாகவும், காமெடியனாகவும் திகழ்ந்தாலும் பின்புலத்தில் அரசியல் மீது ஆழ்ந்த ஆர்வம் கொண்டவர். கடந்த சில ஆண்டுகளாகவே அவர் பல இடங்களில் தன் அரசியல் எண்ணங்களை வெளிப்படையாகத் தெரிவித்திருக்கின்றார்.
அத்துடன் பவர் ஸ்டார், “நான் அரசியலுக்கு தயாராக இருக்கேன்… யார் வந்தாலும் பயப்படமாட்டேன்!” என்றும் கூறியுள்ளார். மேலும் பெரிய நட்சத்திரமான விஜயை நேரடியாக எதிர்த்து நிற்பேன் என்று கூறுவது, பவர் ஸ்டாரின் தைரியத்தையும், நம்பிக்கையையும் காட்டுவதாக ரசிகர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.
Listen News!