2022ம் ஆண்டு தீபாவளி பரிசாக திரையரங்குகளில் வெளியான 'சர்தார்', கார்த்தியின் நடிப்பால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இதன் வெற்றியைத் தொடர்ந்து, தற்போது 'சர்தார் 2' படம் உருவாகி வருகின்றது. ரசிகர்களிடையே இப்படத்தின் எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே இருக்கின்றது. இதற்கிடையில், இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் அறிமுக வீடியோ தற்போது வெளியாகி இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
படத்தின் பர்ஸ்ட் லுக்கில், கார்த்தி மிகவும் கம்பீரமாகவும் கெத்தாகவும் காணப்படுகின்றார். அத்துடன் இப் படத்தில் எஸ்.ஜே.சூர்யா வில்லன் வேடத்தில் நடிக்கிறார் என்பது ஏற்கனவே உறுதி செய்யப்பட்டிருந்தது. இவரைத் தவிர மாளவிகா மோகன் மற்றும் பிரியங்கா மோகன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
தற்போது ‘சர்தார் 2’ திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. அந்தவகையில் படக்குழுவினர் திட்டமிட்ட படி, படம் எதிர்வரும் ஜூலை மாதம் திரைக்கு வர உள்ளதாக எதிர்பார்க்கப்படுகின்றது. அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் கூறப்படுகின்றது. அந்தவகையில் இப்படத்தின் அறிமுகப்பாடல் ரசிகர்கள் அனைவரையும் வெகுவாகக் கவர்ந்துள்ளது.
Listen News!