• Sep 20 2024

குக் வித் கோமாளி புகழுக்கு என்னாச்சு..புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சூப்பர் ஹிட் காமெடி ஷோவான Kpy சாம்பியன் என்ற நிகழ்ச்சியில் காமெடியனாக கலந்து கொண்டவர் தான் புகழ்.

இதனைத் தொடர்ந்து பல நிகழ்ச்சிகளில் பங்குபற்றி வந்தாலும் இவருக்கென்று தனி அடையாளத்தையும் ரசிகர் பட்டாளத்தையும் ஏற்படுத்திக் கொடுத்த ஷோ என்றால் அது குக்வித் கோமாளி ஷோ தான்.

இந்த நிகழ்ச்சியில் இரண்டு சீசன்களிலும் கோமாளியாகப் பங்கு பற்றி பிரபல்யமடைந்த இவர் தற்பொழுது முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் காமெடியனாகவும் சில திரைப்படங்களில் ஹீரோவாகவும் நடித்து வருகின்றார்.

மேலும் மிஸ்டர் Zoo கீப்பர் என்ற அந்த படத்தின் ஷூட்டிங் இந்தியா மட்டுமின்றி பிலிப்பைன்ஸ் நாட்டிலும் நடைபெற்றது. அங்கு நிஜமான இருக்கும் புலி உள்ளிட்ட விலங்குகள் உடன் புகழ் நடித்து இருக்கிறார்.

இவ்வாறுஇருக்கையில் புகழ் எப்போதும் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக பதிவுகள் போட்டு வரும் நிலையில் ரசிகர்கள் மத்தியில் நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்து வருகிறது.

இந்நிலையில் புகழ் ரோட்டோரம் இருக்கும் பேருந்து நிறுத்தத்தில் அமர்ந்திருக்கும் போட்டோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதை பார்த்த ரசிகர்கள் புகழுக்கு என்னாச்சு என்று கேட்டு வருகின்றனர்.

ராமேஸ்வரம் calling என்று புகழ் அதில் குறிப்பிட்டு இருக்கிறார். அதனால் அவர் ராமேஸ்வரம் செல்லும் வழியில் இப்படி ரோட்டோரம் அமர்ந்து போட்டோ எடுத்திருப்பார் என தெரிகிறது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement