• Mar 25 2026

"பராசக்தி" படத்திற்கு தடை கோரி நீதிமன்றத்தில் வழக்கு.. நடந்தது என்ன.?

shali / 2 months ago

Advertisement

Listen News!

நடிகர்கள் சிவகார்த்திகேயன், ரவிமோகன், அதர்வா நடித்த, சுதா கொங்கரா இயக்கிய புதிய திரைப்படம் ‘பராசக்தி’, ஜனவரி 10ம் தேதி திரையரங்குகளில் வெளியிடப்பட இருக்கிறது. இப்படத்தை ஆகாஷ் பாஸ்கரனின் டான் பிச்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.


இந்நிலையில், இணை இயக்குனர் ராஜேந்திரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து, இப்படத்தின் வெளியீட்டிற்கு தடை விதிக்க கோரியுள்ளார். அவர் கூறியதாவது, தனது ‘செம்மொழி’ என்ற கதையை திருடி தயாரிக்கப்பட்டதாக இந்த திரைப்படம் குற்றஞ்சாட்டப்படுவதாகவும், இதற்கான உரிமையை மீறியுள்ளது என்றும் தெரிவித்துள்ளார். 

அதன்படி, சென்னை உயர் நீதிமன்றம் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கம் சார்பாக மனுவை பரிசீலித்து, “கதை திருட்டு புகார் தொடர்பாக விசாரித்து ஜனவரி 2ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்” என உத்தரவிட்டுள்ளது.


படத்தை தயாரித்த டான் பிச்சர்ஸ் நிறுவனம் மற்றும் இயக்குநர் சுதா கொங்கரா இதுவரை வழக்கு தொடர்பாக எந்த அதிகாரபூர்வ பதிலும் வழங்கவில்லை. ஆயினும், வழக்கு நீதிமன்றத்தில் தொடரும் நிலையில், வெளியீட்டிற்கு முன்பாக இதிலிருந்து வெளியேறவேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Advertisement