• Apr 28 2024

எலும்பும் தோலுமாக இருக்கிறீங்களே என்னம்மா பண்ணி வச்சிருக்கிறீங்க- குஷ்புவைப் பார்த்து வியந்து போன ரசிகர்கள்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் வருஷம் பதினாறு என்னும் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியவர் தான் குஷ்பு. இவர் இதனைத் தொடர்ந்து ரஜினி, கமல், கார்த்தி, விஜயகாந்த், சத்தியராஜ், சரத்குமார் என ஏகப்பட்ட முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்திருக்கின்றார்.


தமிழைத் தவிர தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளிலும் பல திரைப்படங்களில் நடித்திருக்கின்றார். இது தவிர  அரசியல், சின்னத்திரை என அனைத்திலும் சகலகலா வல்லியாக சுற்றி வந்த குஷ்பு. சுந்தர் சியை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.


அந்த வகையில் இறுதியாக ரஜினி நடிப்பில் வெளியான அண்ணாத்த திரைப்படத்தில் நடித்திருந்தார்.சமீபகாலமாக உடற்பயிற்சி செய்வதில் ஆர்வம் காட்டி வந்த இவர்  இளம் நடிகர்களுக்கு டஃப் கொடுக்கும் வகையில் 20 கிலோ குறைந்துள்ளார். 


இநத நிலையில் தற்பொழுது  குலாம் ஜாமுன் மாதிரி சும்மா கும்முனு இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இதனைப் பார்த்த ரசிகர்கள் சிலர் சின்னத்தம்பி பட குஷ்புவை போல் இருப்பதாக கூறி வந்தாலும், ஒரு சிலர், என்ன மேடம் அதெல்லாம், உங்களுடையே அழகே கொழு கொழு கன்னம் தான் அது இல்லாமல், எலும்பும் தோலுமாக ஆளே அடையாளம் தெரியல... இப்படி ஆகிட்டீங்களே என புலம்பி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement