டைரக்டர் முத்தையா இயக்கிய விருமன் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் தான் அதிதி. இவர் பிரமாண்ட இயக்குநர் ஷங்கரின் இளைய மகள் .
தனது முதல் படத்திலேயே முன்னணி நடிகரான கார்த்திக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
இப்படத்தில் பக்கா கிராமத்து பெண்ணாக பாவாடை தாவணியில் தோன்றி ரசிகர்கள் மனதை கவர்ந்து விட்டதோடு பட ரிலீஸிற்கு முன்பே பிரபல்யமாகி விட்டார். பட ரிலீஸிற்கு பின்னர் இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உருவாகியுள்ளது.
விருமன் படத்தின் தொடர்ந்து அடுத்ததாக சிவகார்த்திகேயனுடன் இணைந்து மாவீரன் படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் அண்மையில் துவங்கியுள்ளது.
இந்நிலையில், நடிகை அதிதி ஷங்கர் அண்மையில் அளித்த பேட்டியில் நடிகர் விஜய்யுடன் நடிப்பது குறித்து பேசியுள்ளார்.
மேலும் இதில் ' விஜய் சாரை எனக்கு ரொம்ப பிடிக்கும், அவருடன் சேர்ந்து நடிக்க வேண்டும். அதுவும் அவருடன் நடனம் ஆடுவது எனக்கு மிகவும் பிடிக்கும் ' என்று தெரிவித்துள்ளார் அதிதி.
இவ்வாறுஇருக்கையில் விஜய் குறித்து அதிதி பேசியுள்ளது தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
Listen News!