• May 19 2024

விவேக்கை போல இவர் பெயரிலும் சாலை வேண்டும்-திரௌபதி இயக்குநர்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் 30 ஆண்டு காலம் தன் தனிச்சிந்தனையாலும், நடிப்பாலும் சமூக விழிப்புணர்வு வசனங்களாலும் சின்னக் கலைவாணர் என அழைக்கப்பட்டவர் நடிகர் விவேக். இவர் தமிழில் அனைத்து முன்னணி நடிகர்களின் திரைப்படங்களிலும் நடித்து தனக்கென ஓர் அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டவர்.

டாக்டர் அப்துல் கலாமினைப் பின்பற்றும் இவர் இந்தியாவின் பல்வேறு இடங்களிலும் மரம் நடுகைப் பணியை ஆற்றி வந்தார். இந்த நிலையில் கடந்த ஆண்டு மாரடைப்பு காரணமாக திடீரென இறப்புக்குள்ளானார். இவரது மரணம் அனைத்து ரசிகர்கள் மத்தியிலும் கடும் சோகத்தை ஏற்படுத்தியது. இவரின் மறைவுக்கு ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை என பலரும் தங்களின் இரங்கலை தெரிவித்து இருந்தார்கள். சமீபத்தில் தான் விவேக்கின் முதலாம் ஆண்டு நினைவு நாள் வந்து இருந்தது.

இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் நடிகர் விவேக்கின் மனைவி அருட்செல்வி தமிழக முதல்வர் முக ஸ்டாலினை சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை வைத்து இருந்தார். மேலும் அதில் அவர், நடிகர் விவேக் வீடு அமைந்திருக்கும் சாலைக்கு விவேக்கின் பெயர் சூட்ட வேண்டும் என்று கோரிக்கை வைத்து இருந்தார். தமிழக அரசு இந்த கோரிக்கையை ஏற்று முதல்வர் ஸ்டாலின் உடனடியாக விவேக் பெயரை சூட்ட வேண்டுமென அரசாணையை போட்டு இருந்தது. அதன் பெயரில் விவேக் நினைவாக அவர் வசித்து வந்த பெருநகர சென்னை மாநகராட்சியின் கோடம்பாக்கம் மண்டலத்தில் உள்ள பத்மாவதி நகர் பிரதான சாலையை ‘சின்னக் கலைவாணர் நகர் சாலை’ என பெயர் மாற்றம் செய்து இருக்கிறது.

மேலும் இந்த பலகை திறப்பு விழாவில் விவேக் குடும்பத்தினர் கலந்துகொண்டு நன்றி தெரிவித்து இருந்தார்கள். இதற்கு பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை என பலரும் வாழ்த்துக் கூறி அரசுக்கு பாராட்டு தெரிவித்திருந்தார்கள். அந்த வகையில் இயக்குனர் மோகன்ஜி அவர்களும் டீவ்ட் போட்டிருந்தார். அதில் அவர் தெரிவித்திருப்பதாவது, இந்த செயலுக்கு தமிழக அரசுக்கு வாழ்த்துக்கள். சின்ன கலைவாணர் போலவே தனது வாழ்வில் அதிக சேவை புரிந்த வடச்சென்னை சேர்ந்த மக்கள் மருத்துவர் டாக்டர் திரு ஜெயசந்திரன் அவர்களுக்கும் உரிய மரியாதை அளித்து கௌரவப்படுத்துமாறு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் என்று பதிவிட்டிருந்தார்.

அத்தோடு இப்படி மோகன்ஜி பதிவிட்டிருக்கும் டாக்டர் ஜெயச்சந்திரன் வேற யாரும் இல்லைங்க, 5 ரூபாய் மருத்துவர். மருத்துவத்தை வணிகமாக கருதும் பெரும்பாலான மருத்துவர்களுக்கு மத்தியில் 5 ரூபாய்க்கு மருத்துவம் பார்த்து வந்த மருத்துவர் தான் ஜெயச்சந்திரன். மேலும், கைராசி டாக்டர், மக்கள் மருத்துவர், சமூக மருத்துவர், ஐந்து ரூபாய் டாக்டர் என்று இவருக்கு பல பட்டங்கள் இருக்கிறது. கல்பாக்கம் கொடைபட்டினம் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயச்சந்திரன். இவரது அப்பா சுப்பிரமணி விவசாயி. உடம்பு சரியில்லை என்றால் கூட 30 கிலோ மீட்டர் தாண்டி போய் மருத்துவம் பார்க்க வேண்டிய சூழலில் இருந்தவர் ஜெயச்சந்திரன்.

தன்னுடைய கிராமத்தின் நிலையை மாற்ற வேண்டும் என்பதற்காகவே ஜெயச்சந்திரன் மருத்துவம் படித்தார். மேலும் மருத்துவம் வியாபாரம் ஆகி விடக்கூடாதென்பதை நோக்கமாகக் கொண்ட ஜெயச்சந்திரன் தன்னுடைய கிராமம் போலவே அடிப்படை வசதி இல்லாமல் இருந்த வண்ணார்பேட்டையில் உள்ள வெங்கடாசலம் தெருவில் 1971ஆம் ஆண்டு கிளினிக்கை ஆரம்பித்தார். சிகிச்சை பெற வரும் நோயாளிகளிடம் குறைந்தபட்சம் இரண்டு ரூபாயிலிருந்து அதிகபட்சம் ஐந்து ரூபாய் வரை கட்டணம் வாங்கி இருந்தார். சுமார் 40 ஆண்டுகளாக இதையை பெற்று இருக்கிறார். ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருத்துவ முகாம்களை டாக்டர் ஜெயச்சந்திரன் நடத்தியிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நேதாஜி சமூக சேவை இயக்கம் என்ற அமைப்பை ஆரம்பித்து கல்வி உதவித்தொகை, சிறுவர்களுக்கு தேவையான உதவிகள் என அனைத்து உதவிகளையும் செய்து வந்து இருக்கிறார். மேலும் இப்படி மக்களுக்காகவே வாழ்ந்து இருந்த டாக்டர் ஜெயச்சந்திரன் 2018ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் காலமானார். அவருடைய இழப்பு வண்ணார்பேட்டை பகுதி மக்களிடை மட்டுமில்லாமல் பல பேருக்கும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இவரை தான் கௌரவிக்க வேண்டும் தற்போது இயக்குனர் மோகன்ஜி கோரிக்கை வைத்திருக்கிறார். இதற்கு கோரிக்கையை தமிழக அரசு ஏற்குமா? இல்லையா? என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

பிறசெய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement