இந்த ஆண்டு வெளியான சந்தானத்தின் வடக்குப்பட்டி ராமசாமி திரைப்படம் ஓரளவுக்கு வசூலில் வசூலித்து இருந்தாலும் பெரிய அளவிற்கு பாக்ஸ் ஆபீஸ் ஹிட் அடிக்கவில்லை.
இதை தொடர்ந்து தற்போது ஆனந்த் நாராயணன் இயக்கத்தில் சந்தானம் நடித்த திரைப்படம் தான் இங்கு நான் தான் கிங்கு. இந்த படத்தில் ப்ரியாலயா, தம்பி ராமையா, கூல் சுரேஷ் உள்ளிட்டோர் நடித்திருந்தார்கள். இந்த படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வருகின்றது.
இந்த நிலையில், நடிகர் சந்தானம் நடித்த இங்க நான் தான் கிங்கு படத்தை விமர்சித்துள்ளார் ப்ளூ சட்டை மாறன். அதன்படி அவர் கூறுகையில்,
இந்த படத்தில் கல்யாண வயச தாண்டியும் ஹீரோவுக்கு கல்யாணம் ஆகவில்லை. பெண் பார்க்க போற எல்லா இடத்திலும் மாப்பிள்ளைக்கு சொந்த வீடு இருக்கா என்று கேட்க, 20 லட்சத்தை கடன் வாங்கி வீடு கட்டுகிறார்.
அதன்பின், ஜமீன் வீட்டில் இருந்து ஒரு வரம் வர, அந்தப் பெண்ணை திருமணம் செய்து வாழ்க்கையில் செட்டில் ஆகி விடலாம் என்று திட்டம் போடுகிறார். ஆனால் அதற்கு பிறகு தான் ஜமீன் குடும்பம் ஒரு திவாலான குடும்பம் என்று தெரிய வருகிறது. இதனால் மனைவியை மட்டும் இல்லாமல் மொத்த குடும்பத்தையும் பார்க்கும் பொறுப்பு ஹீரோ தலையில் விழுகிறது.
இப்படி இந்த கதை செல்ல, ஒரு தீவிரவாதியின் கதை வருகிறது. அதில் தீவிரவாதிக்கும் ஹீரோவுக்கும் என்ன தொடர்பு என்பது தான் இங்கு நான் தான் கிங்கு திரைப்படத்தின் கதை.
இந்த படத்தின் மைனஸ் என்னவென்றால் இது நல்ல நகைச்சுவை படம் என்றாலும் திரைக்கதையில் கோட்டை விட்டுள்ளார்கள். முதலில் ஹீரோவுக்கு கல்யாணம் ஆகவில்லை என ஆரம்பித்து பின் தீவிரவாதியை கதையில் சேர்த்ததால் கதை எதை நோக்கி போகுதுன்னே தெரியவில்லை.
குறிப்பாக படம் ஆரம்பிச்சு 20 நிமிஷத்துல கதை எதை நோக்கி போகுது என்று சொல்லலாம். ஆனால் இந்தப் படத்தில் எதை நோக்கி செல்கின்றது என்று தெரியவில்லை, இதுதான் இதன் மிகப்பெரிய மைனஸ். வழக்கமாக தமிழ் சினிமாவில் நம்மை தியேட்டருக்குள் உட்கார வைத்து ஊமைகுத்தா குத்துவாங்க. அப்படித்தான் இந்த படத்திலும் நமக்கு ஊமைகுத்தா குத்தி இருக்காங்க என்று ப்ளூ சட்டை மாறன் பேசியுள்ளார்.
Listen News!