• Apr 26 2024

துணிவு படத்தோட ட்ரெய்லரை மறுபடியும் பாருங்க அப்போ புரியும்- இயக்குநர் H.வினோத் கொடுத்த அப்டேட்

stella / 1 year ago

Advertisement

Listen News!

அஜித் நடிப்பில் உருவாகியுள்ள துணிவு படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது . இப்படத்தில் கதாநாயகியாக மஞ்சுவாரியார் நடித்திருப்பதோடு வரும் பொங்கலை முன்னிட்டு 11ம் திகதி பிரமாண்டமாக வெளியாகவுள்ளது.

இந்த படத்திற்கு நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய,   கலை இயக்குனராக மிலன் பணிபுரிய,  இந்த படத்தின் இசையமைப்பாளராக ஜிப்ரான் பணிபுரிகிறார். எடிட்டராக விஜய் வேலுக்குட்டி பணிபுரிகிறார். சண்டை காட்சிகளை சுப்ரீம் சுந்தர் வடிவமைப்பு செய்கிறார்‌‌சமீபத்தில் வெளியான துணிவு படத்தின் ட்ரெய்லர் 60 மில்லியன் பார்வையாளர்களை நோக்கி வைரலாகி வருகிறது.


இந்நிலையில் இயக்குநர் ஹெச். வினோத் & மஞ்சு வாரியர் கலைஞர் தொலைக்காட்சி சேனலுக்கு துணிவு படம் குறித்து பிரத்யேக பேட்டி ஒன்றை அளித்துள்ளனர். இந்த நிகழ்ச்சி துணிவு ஸ்பெஷல் என்ற பெயரில் ஜனவரி மாதம் 8 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான ப்ரோமோ வீடியோவும் வெளியாகி உள்ளது. இதில் வலிமை படத்தின் அப்டேட் டிரெண்ட் ஆனது குறித்து பேசிய இயக்குநர் ஹெச். வினோத், "பட ரிலீஸ்க்கு 60 நாள் முன்னாடி அப்டேட் கொடுத்தால் ரிலீஸிக்கு சரியாக இருக்கும். வலிமை படத்தின் அப்டேட் கேட்டதால் படத்தின் காட்சிகளை கொஞ்சம் கொஞ்சமாக கட் பண்ணி போட்ட பின்னர், தியேட்டரில் பார்க்கும் போது காட்சிகள் குறைவாக இருந்தது. 

கணிக்க கூடிய வகையில் படம் அமைந்துவிடும்!" என வினோத் கூறினார். அப்போது, "அதுனால தான் துணிவு ட்ரெய்லர்ல எதுவுமே வெளியிடலயா?" என தொகுப்பாளர் மீண்டும் கேள்வி கேட்க, இயக்குநர் H. வினோத், "துணிவு ட்ரெய்லர்லயே அந்த படத்தோட கதை இருக்கு.மறுபடியும் பாருங்க. இதை பத்தி தான் கதைன்னு தெரியும் " என வினோத் பதில் அளித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement