• Apr 15 2026

அந்த நபருக்கு எச்சரிக்கை..! கமலின் மகள் வெளியிட்ட மோசடி புகார்...

Mathumitha / 10 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான கமல்ஹாசனின் இளைய மகள் அக்ஷரா ஹாசன் தற்போது ஒரு முக்கிய விவகாரத்தில் ரசிகர்களை எச்சரித்து உள்ளார். தனுஷ் உடன் 'ஷமிதாப்' அஜித் உடன் 'விவேகம்' உள்ளிட்ட படங்களில் நடித்த அக்ஷரா தற்போதைக்கு எந்த புதிய திரைப்படங்களிலும் ஈடுபட்டு இல்லாத நிலையில் அவரை சுற்றியுள்ள மோசடி சம்பவம் கவலையை ஏற்படுத்தியுள்ளது.


இப்ராஹிம் அக்தர் என்ற நபர் அக்ஷரா ஹாசனும் அவரது குடும்பமும் இணைந்து ஒரு படம் தயாரிக்கிறார்கள் என கூறி ஊட்டியில் ஆபீஸ் வைத்திருப்பதாக பொய்யான தகவலை பரப்பி பலரை ஏமாற்றி வருகிறார். 


இது குறித்து அக்ஷரா ஹாசன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் “அவருடன் எங்களுக்கும் எங்களுடைய குடும்பத்துக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை. இது முற்றிலும் பொய்யான தகவல். இதுபற்றி சட்ட நடவடிக்கை எடுத்து வருகிறோம். தயவுசெய்து அவரிடம் எச்சரிக்கையாக இருங்கள்” எனக்கூறி உள்ளார். அக்ஷராவின் இந்த எச்சரிக்கை பதிவு தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

Advertisement

Advertisement