• Jan 19 2025

கேமரா முன்னாடி நின்று ரச்சிதாவிடம் தினேஷ் பற்றி கம்லெயின்ட் பண்ணிய விசித்ரா- திட்டித் தீர்க்கும் ரசிகர்கள்

stella / 1 year ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் சீசன் 7 ஆனது தற்பொழுது விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கின்றது.இந்த சீசனில் இந்த வாரம் முழுக்க டிக்கெட் டூ பினாலே டாஸ்க் நடைபெற்றது. இதில் விஷ்ணு வெற்றி பெற்றார்.அத்தோடு இந்த நிகழ்ச்சியிலிருந்து இந்த வாரம் ரவீனா வெளியேறியுள்ளதாக கூறப்படுகின்றது.

மேலும் இந்த சீசனில் சண்டைகள் எல்லை மீறி செல்வது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. அதிலும் குறிப்பாக தினேஷ் மற்றும் விசித்ரா ஆகியோர் சண்டை நீண்ட காலமாக நடந்து வருகிறது. 


இந்நிலையில் தற்போது தினேஷ் உடன் சண்டைபோட்டுவிட்டு அவரை பற்றி திட்டிய விசித்ரா கேமரா முன் நின்று கோபமாக பேசிக்கொண்டிருந்தார்."இங்கே இவருடன் ஹவுஸ் மேட் ஆகவே இருக்க முடியல, இவர்கூட குடித்தனம் எப்படி பண்ணுவாங்க, விட்டுட்டு ஓட வேண்டியது தான். திரும்பி கிரிம்பி வந்துடாதமா தாயே" என ரச்சிதாவிடம் சொல்வது போல கேமராவில் கூறி இருக்கிறார் விசித்ரா.

இதனால் விசித்ராவின் உண்மை முகம் இதுதான் என சொல்லி நெட்டிசன்கள் அவரை விமர்சித்து வருகின்றனர். மேலும் சக போட்டியாளரின் தனிப்பட்ட விஷயங்களை பேசியது மிக தவறு. 

தினேஷ்- ரச்சிதா விவாகரத்து கோர்ட்டில் உள்ளது இந்த சமயத்தில் ரச்சிதாவை பார்த்து நீ இனிமே அவருடன் சேராத தனியாக வாழ்வது மேல் என்று கூறியது அருவருக்கத்தக்கது என்றும் கூறி வருகின்றனர்.


Advertisement

Advertisement