நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் முன்னாள் பேட்மின்டன் வீராங்கனை ஜ்வாலா குட்டா தம்பதிக்கு சமீபத்தில் பெண் குழந்தை பிறந்தது. இந்த மகிழ்ச்சியான செய்தியை அவர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்திருந்தனர். தற்போது இந்த குழந்தைக்கு 'மிரா' என அழகான பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இதுவரை யாரும் எதிர்பாராத வகையில் இந்த பெயரைக் சூட்டியவர் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமீர் கான் நெருங்கிய நட்பு கொண்ட விஷ்ணு விஷால் – அமீர் கான் குடும்பங்கள் தனிப்பட்ட சந்திப்பின் போது குழந்தையின் பெயரையும் அதற்கான அர்த்தத்தையும் பகிர்ந்துள்ளனர். 'மிரா' என்ற பெயர் ஸ்மார்ட், அழகு, அமைதி என பல அர்த்தங்களைக் கொண்டது.
“என் தேவதையே” என மகளின் வரவை கொண்டாடும் விதமாக விஷ்ணு விஷால் குடும்பம் புது பாதையை தொடங்கியுள்ளது. தற்போது இந்த செய்தி ரசிகர்கள் மற்றும் சினிமா வட்டாரங்களில் பெரிதும் வைரலாகி வருகிறது.
Listen News!