நடிகர் விஷாலை வைத்து படம் தயாரிப்பவர்கள், தயாரிப்பாளர் சங்கத்தை கலந்து ஆலோசித்த பின்னர் படம் எடுக்க வேண்டும் என்று தயாரிப்பாளர் சங்கம் நேற்று திடீரென அறிக்கை வெளியிட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
தயாரிப்பாளர் சங்கத்தில் உள்ள 12 கோடி ரூபாயை விஷால் மோசடி செய்து விட்டதாகவும் இதனை சிறப்பு ஆடிட்டர் மூலம் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் எனவே விஷால் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப் போவதாகவும் தயாரிப்பாளர் சங்கத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இதற்கு விஷால் பதிலடி கொடுத்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் ’இது உங்கள் குழுவில் உள்ள கதிரேசன் உள்ளிட்டவர்கள் கூட்டு முடிவு, அந்த நிதி, தயாரிப்பாளர் சங்கத்தின் நலிந்த மூத்த உறுப்பினர்களின் மருத்துவ காப்பீடு, நலப்பணிகள், அவர்களுடைய குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு கல்வி உள்ளிட்ட நலன்களுக்கு பயன்படுத்தப்பட்டது என்பது உங்களுக்கு தெரியாதா?
திரையுலகில் ஏற்கனவே நிறைய வேலை உள்ளது, அதில் கவனம் செலுத்துங்கள், இரட்டை வரிவிதிப்பு, தியேட்டர் பராமரிப்பு கட்டணம் என பல்வேறு விஷயங்கள் தீர்க்கப்படாமல் உள்ளது.
நான் தொடர்ந்து நடிப்பேன், இதற்கு முன் படங்கள் தயாரிக்காத, எதிர்காலத்திலும் தயாரிக்க முடியாத வெறும் தயாரிப்பாளர்கள் என்று சொல்லிக் கொள்பவர்களே, என்னை முடிந்தால் தடுத்து பாருங்கள்’ என்று சவால் விட்டு உள்ளார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Listen News!