• Oct 18 2024

நீச்சல் குளத்தில் ஒருவரை தள்ளிவிட்ட கீர்த்தி சுரேஷ்.. இவ்வளவு சூப்பரா கிரிக்கெட் விளையாடுவாரா?

Sivalingam / 2 months ago

Advertisement

Listen News!

நடிகை கீர்த்தி சுரேஷ் தனது குடும்பத்தினருடன் விளையாடிக் கொண்டிருக்கும் நிலையில் நீச்சல் குளத்தில் ஒருவரை தள்ளிவிட்ட வீடியோ அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

தமிழ், தெலுங்கு, மலையாள திரையுலகில் முன்னணி நடிகையாக உள்ள கீர்த்தி சுரேஷ் தற்போது பாலிவுட்டில் ’பேபி ஜான்’ என்ற படத்திலும் நடித்துள்ளார் என்பதும் அந்த படம் வரும் டிசம்பர் மாதம் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தமிழில் அவர் நடித்துள்ள ’ரகு தாத்தா’ என்ற திரைப்படம் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த படம் ஹிந்தி திணிப்பை எதிர்த்து பேசும் கதையம்சம் கொண்டது என்றும் அதே சமயம் அவர் ஹிந்தியில் ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருப்பது முரணாக இருக்கும் வகையில் உள்ளது குறித்த கேள்விக்கு எப்படியோ சமாளித்து பதில் அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் தனது காதல் குறித்த வதந்திக்கு அவர் சமீபத்தில் பதிந்து பதில் அளித்த போது ’உண்மையை விளக்கினால் தெளிவாகும், வதந்தியை விளக்கினால் உண்மையாகும்’ என்ற விஜய்யின் மேடைப்பேச்சு வசனத்தை பதிலாக அளித்து சமாளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் அவர் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் நீச்சல் குளத்தில் ஒருவரை பிடித்து விளையாட்டாக தள்ளி விடுவது, சூப்பராக கிரிக்கெட் விளையாடுவது, குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக இருப்பது போன்ற காட்சிகளை கொண்ட வீடியோவை வெளியிட்டுள்ள நிலையில் இந்த வீடியோவுக்கு சுமார்  2 லட்சம் லைக் குவிந்துள்ளது. 


Advertisement