விஜய் தொலைக்காட்சியில் 2004 முதல் 2007 வரை ஒளிபரப்பான ‘லொள்ளு சபா’ நிகழ்ச்சி, தமிழ் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற காமெடி ஷோவாகும். இந்த நிகழ்ச்சியின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானவர்களில் சந்தானம், மதுமிதா, ஜீவா, மனோகர், சுவாமிநாதன் மற்றும் யோகி பாபு ஆகியோர் முக்கியமானவர்கள். இவர்கள் இன்று தமிழ் திரையுலகில் தனி அடையாளம் ஏற்படுத்தியவர்கள்.
இந்நிலையில், லொள்ளு சபா வழியாக ரசிகர்களை சிரிக்க வைத்த யோகி பாபு, கிரிக்கெட் மைதானத்திலும் தன்னுடைய திறமையை நிரூபிக்கிறார். சமீபத்தில் நடைபெற்ற ஒரு அமேச்சூர் கிரிக்கெட் போட்டியின் போது, பவுலிங் மற்றும் பேட்டிங்கில் அசத்தலாக நடித்தது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அவரின் பவுலிங் ஸ்டைலும், பேட்டிங் பாஸ்ச்சரையும் பார்த்து ரசிகர்கள் வியப்பில் மூழ்கியுள்ளனர்.
"ALL ROUNDER போலவே யோகி பாபு விளையாடுகிறார்!" என சமூக ஊடகங்களில் ரசிகர்கள் புகழ்ந்துள்ளனர். அவரது காமெடி மட்டுமல்லாமல், விளையாட்டு திறமையும் பாராட்டத்தக்கதாக அமைந்துள்ளது.
பாடி இருந்தாலும், சிரிக்க வைத்தாலும், இப்போது பந்து வீசினாலும், யோகி பாபு களத்தில் மின்னி விளங்குகிறார். வெறும் திரைத்திறமையால் அல்லாமல், பல துறைகளிலும் தன்னை நிரூபிக்கின்ற அவரது பன்முகத் திறமையை இது மீண்டும் ஒரு முறை உறுதிப்படுத்துகிறது.
Listen News!