• May 19 2024

'கமல் ரசிகர்களுக்கு விக்ரம் படம் அன்லிமிடெட் அசைவ விருந்து'- நெகிழ்ச்சியில் பிரபல இயக்குநர்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் மாஸ் இயக்குநராக வலம் வரும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாகன் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்பில் வெளியாகிய திரைப்படம் தான் விக்ரம். இப்படத்தில் விஜய்சேதுபதி மற்றும் பதக் பாசில் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இப்படத்தில் சூர்யா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். கடந்த ஜுன் மாதம் 3ம் திகதி வெளியாகிய இத்திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது.

இதுவரை 150 கோடி ரூபாய்க்கும் மேல் உலகளவில் வசூலித்து பிளாக்பஸ்டர் ஹிட்டாகியுள்ளதாக கூறப்பட்ட இந்தப் படம் ஆந்திரா, தெலுங்கானா மற்றும் அமெரிக்காவில் இதுவரை இல்லாத அளவுக்கு வசூல் வேட்டை நடத்தி வருகிறது .

இந்நிலையில் படத்தைப் பார்த்துள்ள ‘மூடர்கூடம்’இயக்குநர் நவீன் “என்னைப் போன்ற கமல் ரசிகர்களுக்கு இயக்குநர் லோகேஷ் அன்லிமிடெட் அசைவ விருந்து படைத்துள்ளார்.” எனப் பாராட்டி டுவிட் செய்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement