• Apr 27 2024

15 மில்லியன் பார்வையாளர்களை கடந்தது விஜய்யின் தீ தளபதி பாடல்! விஜய் ரசிகர்கள் குஷி

lathushan / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். தொடக்கத்தில் இவர் தனது தந்தையான எஸ். ஏ. சந்திரசேகர் இயக்கிய திரைப்படங்களில் நடித்து வந்தார். 


இவர் ஏறத்தாழ 10 படங்களுக்குப் பிறகு தனது இடத்தைத் தக்கவைத்துக் கொண்டார். இவர் தற்போது தமிழ்த் திரைப்படத் துறையில் முதன்மை நடிகர்களுள் ஒருவராகக் காணப்படுகிறார்.


விஜயின் ரசிகர்கள் அவரை "தளபதி" என்று அழைக்கிறார்கள். விஜய் தனது 10வது வயதில் வெற்றி என்ற திரைப்படத்தில் குழந்தை நடிகராக அறிமுகம் ஆனார். 


பின்னர் 18ம் வயதில் தன் தந்தை இயக்கிய நாளைய தீர்ப்பு படத்தில் முதன்முறையாக முதன்மை நடிகராக நடித்தார். இந்நிலையில் இயக்குநர் வம்சி இயக்கும் 'வாரிசு' படத்தில் நடித்து வருகிறார் விஜய். தில் ராஜு தயாரிக்கும் இப்படம் ஒரு எமோஷனல் குடும்பப் படம் என்று கூறப்படுகிறது.


முன்னதாக வாரிசு படத்திலிருந்து முதல் பாடலாக ரஞ்சிதமே என்ற பாடல் வெளியாகி யூ டியூபில் 75 மில்லியன் வியூஸ்களை கடந்தது. இந்நிலையில் கடந்த 4-ம் தேதி இரண்டாவது சிங்கிளாக வெளியான தீ தளபதி பாடல் தற்போது 15 மில்லியன் பார்வையாளர்களை யூடியூப்பில் கடந்துள்ளது. இதனை ரசிகர் கொண்டாடி வருகின்றனர்.


Advertisement

Advertisement

Advertisement