• Apr 26 2024

வாரிசு இசை வெளியீட்டு விழாவிற்கு முக்கிய விருந்தினராக வந்திருக்கும் விஜய்யின் அம்மா மற்றும் அப்பா- முண்டியடிக்கும் ரசிகர்கள்

stella / 1 year ago

Advertisement

Listen News!

இயக்குநர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் வாரிசு. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது.

இந்த விழாவில் நடிகர் விஜய் வெள்ளை சட்டை அணிந்து வந்துள்ளார். நடிகை ராஷ்மிகா மந்தனா, இயக்குநர் வம்சி மற்றும் இசையமைப்பாளர் தமன் உள்ளிட்ட படக்குழுவினர் பங்கேற்றுள்ளனர்.இவர்களுடன் நடிகர் சரத்குமார் மற்றும் நடிகரும் இயக்குநருமான எஸ்.ஜே. சூர்யா வருகை தந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 


மேலும் ரசிகர்கள் இசை வெளியீட்டு விழாவுக்கான டிக்கெட் வாங்காமல் முண்டியடித்துக் கொண்டு நேரு உள்விளையாட்டு அரங்கிற்குள் ஓடி வரும் காட்சிகள் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளன. அந்த இடமே ஒரு போர்க்களம் போல மாறி உள்ளது. ரசிகர்களை தடுக்க முயன்ற போலீஸாருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வலம் வருகின்றன.

இந்த நிலையில் நடிகர் விஜய்யின் அப்பா இயக்குநர் எஸ். ஏ. சந்திரசேகர் மற்றும் அம்மா சோபா சந்திரசேகர் இருவரும் வாரிசு இசை வெளியீட்டு விழாவுக்கு வருகை தந்துள்ளதாக கூறப்படுகின்றது. மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவிலும் இருவரும் பங்கேற்று இருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement