• Apr 20 2024

5 கோடி பட்ஜெட்டில் உருவான கனெக்ட் படத்தின் லாபம் இவ்வளவு தானா?- கடும் சோகத்தில் படக்குழு

stella / 1 year ago

Advertisement

Listen News!

கிறிஸ்துமஸ் விடுமுறையை ஒட்டி தமிழ் சினிமாவில் விஷாலின் லத்தி மற்றும் நயன்தாரா நடித்துள்ள கனெக்ட் ஆகிய இரண்டு திரைப்படங்கள் ரிலீஸ் ஆகின. இதில் லத்தி படத்துக்கு அதிகபட்சமாக 400-க்கும் மேற்பட்ட திரைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. அதேபோல் நயன்தாராவின் கனெக்ட் படத்துக்கு 300-க்கும் அதிகமான ஸ்கிரீன்களில் திரையிடப்பட்டன.

இதில் நயன்தாராவின் கனெக்ட் படத்தை அஸ்வின் சரவணன் இயக்கி உள்ளார், இவர் ஏற்கனவே கேம் ஓவர், மாயா போன்ற திரில்லர் படங்களை இயக்கியவர் ஆவார். இப்படத்தை ரெளடி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. 


இதில் சத்யராஜ், வினய் ராய் மற்றும் பாலிவுட் நடிகர் அனுபம்கேர் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.  இப்படம் ரூ. 5 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது.இந்நிலையில், ரூ. 5 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படத்தை நெட்பிலிக்ஸ் நிறுவனம் ரூ. 15 கோடிக்கும் வாங்கியுள்ளது.

 இதன்மூலம் இப்படத்திற்கு ரூ. 10 வரை லாபம் கிடைத்துள்ளது.  இதனால் கனெக்ட் படத்தின் வசூல் குறைவு தான் என படக்குழு கூறி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement