• Jan 19 2025

மீனாவை கண்டபடி அசிங்கப்படுத்திய விஜயா.. மனோஜ்க்கு விழுந்த முதல் அடி

Aathira / 7 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட்டில், மனோஜ் நித்திரையில் இருக்க விஜயா அவரை எழுப்பிக் கொண்டிருக்கின்றார். இதை பார்த்த முத்து இவன இப்படி எழுப்பினால் சரி வராது என்று தண்ணியை ஊற்றி அவரை எழுப்புகிறார்.

இதைத் தொடர்ந்து மீனா கிச்சனில் இருக்க, அங்கு வந்த விஜயா மனோஜ்க்கு வேறயாக சமைக்க சொல்ல, அவர் என்னால முடியாது என்று சொல்கிறார். அதற்கு உங்களுக்கு ரூம் தர இல்லை என்ற கோபத்தில் தானே இப்படி செய்கிற? என்று கண்டபடி அசிங்கமாக மீனாவை திட்டுகிறார். உங்களுக்கு மனசாட்சி இல்லையா இப்படி அசிங்கமா பேசுறீங்க, நீங்க என்ன சொன்னாலும் உங்க மூத்த மகனுக்கு நான் சமைத்து தர மாட்டேன் வேணும்னா நீங்க சமைச்சு கொடுங்க என பதிலடி கொடுத்து செல்கிறார்.


இதை அடுத்து அண்ணாமலை வீட்டுக்கு ஏசி வந்து இறங்க, வாசலில் நின்ற முத்து இதை யார் அனுப்பியது என விசாரித்து ஸ்ருதியின் அம்மாவுக்கு போன் பண்ணி எங்க வீட்டுக்கு ஏசி வேணாம். நீங்க எங்கள அசிங்கப்படுத்தத்தான் ஏசி அனுப்பி இருக்கீங்க. உங்க கூட வீட்ல பத்தோட பதினொன்றாக வைத்துக் கொள்ளுங்கள். அடுத்த குடும்பத்தை குழப்பறதுதான் உங்க புருஷனுக்கு வேலை அப்படி என்று பேசி திருப்பி அனுப்புகிறார்.

இதைக் கேட்டு சுதா கோபத்தில் வாசுதேவனிடம் சொல்ல, அவர் சிரித்துக் கொண்டே இதுவும் நல்லதுக்கு தான். நீ நேரா மனோஜ் கடைக்கு போய் ஏசிய ரிட்டர்ன் கொடு. அப்ப அவங்களுக்குள்ள சண்டை வரும் என சொல்லுகிறார்.

அதன்படியே சுதாவும் ஏசியை மனோஜின் கடைக்கு சென்று  ரிட்டன் கொடுத்துவிட்டு முத்து பற்றி நன்றாக ஏத்தி விடுகிறார். இவர்கள் பிரச்சனையில் அங்கு வந்த கஸ்டமர் ஒருவரும் திரும்பி சென்று விடுகிறார். இதனால் மனோஜ் ரோகினிக்கு பெரிய அடியாக காணப்படுகிறது. இதை பார்த்து சுதா சந்தோசப்படுகிறார் இதுதான் இன்றைய எபிசோட்.

Advertisement

Advertisement