• Jan 19 2025

ஆனாலும் இந்த திமிர் உங்களுக்கு கூடாது ஈஸ்வரி.. பாக்கியாவுக்கு தேவையா இது?

Aathira / 7 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட்டில், ஜெனியை கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணி நடந்து கொள்ளுமாறு பாக்கியா அமிர்தாவிடம் சொல்லிக் கொண்டிருக்க, நான் என்றைக்குமே ஜெனிய ஹேர்ட் பண்ண மாட்டேன் என்று அமிர்தா சொல்லுகிறார். அங்கு எழிலும் வந்துவிட மாமியார் மருமகளுக்குள்ள என்ன மீட்டிங்கா என்று கேட்டு கலாய்க்கிறார்.

அதன்பிறகு அமிர்தாவின் கையைப் பிடித்து தனது ஆசை கனவு பற்றி பேசி, நான் ஒரு படத்தை டைரக்ட் பண்ணி விருது வாங்கி மேடையில் அம்மாவை கௌரவப்பட வைக்கணும். எனக்கு நல்ல அம்மா மனைவி கிடைச்சிருக்காங்க என்று சொல்லுகிறார் எழில்.

இதை தொடர்ந்து ஈஸ்வரி வர, அங்கு சோபாவில் கோபி படுத்திருப்பதை பார்த்து நான் போய் என்ன என்று கேட்கிறேன் என்று குழம்ப, அது எல்லாம் வேண்டாம் என்று ஈஸ்வரிக்காக காபி போட்டு கொடுக்கிறார் கோபி. அவர் ஏதோ தன்னால் முடிந்ததை கலக்கி கொடுக்க நல்லா இருக்கு நீ வாக்கிங் போ என்று அனுப்பிவிட்டு காபியை கொண்டு சிங்கிள் ஊற்றி விடுகிறார் ஈஸ்வரி.


இதை ராதிகாவும் கமலா பார்த்து விட, என்ன பார்க்கிறீர்கள் தள்ளுங்க என்று சொல்லிவிட்டு ராமமூர்த்தியை பார்க்க வருகிறார். அங்கு பாக்கியாவும் ராமமூர்த்தியும் பேசிக் கொண்டிருக்க அங்கு ஈஸ்வரி வர நீங்கள் இருவரும் பேசிக் கொண்டிருந்த நான் வந்து விடுகிறேன் என பாக்கியா செல்கிறார்.

ஈஸ்வரி அங்கு நடப்பவற்றை எல்லாம் ராமமூர்த்தியிடம் சொல்ல, அப்ப கிளம்பி வந்துட வேண்டியது தானே என்று ராமமூர்த்தி சொல்ல, அப்படி எல்லாம் வர முடியாது அந்த கமலாவை துரத்தி போட்டு தான் வருவேன் என சொல்லுகிறார் ஈஸ்வரி.

பிறகு பாக்கியாவிடம் ராமமூர்த்தி அவளுக்கு சாப்பாடு சரியில்லை அதான் குழ்ம்பிட்டு போறாள் என்று சொல்ல, பாக்கியா ஈஸ்வரிடம் சென்று நான் உங்களுக்கு  தினமும் சாப்பாடு கொண்டு வந்து தரவா என்று கேட்க, நான் ஒன்றும் தெருவில் இல்லை என் புள்ள வீட்ல இருக்கேன் என்று திமிராக சொல்லி செல்கிறார் ஈஸ்வரி.

இறுதியாக பாக்கியா ரெஸ்டாரண்டுக்கு பக்கத்து கடை ஓனர் வந்து ஜூஸ் குடித்துவிட்டு பார் திறப்பு விழாவுக்கு பத்திரிகை கொடுத்து விட்டு செல்கிறார் இதுதான் இன்றைய எபிசோட்.

Advertisement

Advertisement