• Jan 19 2025

ஷங்கர் மகள் திருமணத்திற்கு வந்த சங்கீதா.. விஜய் வராததால் வந்தாரா? அப்ப அது உறுதிதானா?

Sivalingam / 9 months ago

Advertisement

Listen News!

இயக்குநர் ஷங்கர் மகள் ஐஸ்வர்யா திருமணம் நேற்று நடைபெற்ற நிலையில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் உள்பட பல பிரபலங்கள் வருகை தந்து மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் இந்த திருமணத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா விஜய் கலந்து கொண்டது தான் பலரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது.



ஷங்கர் மகள் ஐஸ்வர்யா மற்றும் தருண் கார்த்திகேயன் திருமணம் நேற்று சென்னையில் நடந்த நிலையில் இந்த திருமணத்திற்கு தமிழக முதல்வர் முக ஸ்டாலின் வருகை தந்து மணமக்களுக்கு ஆசி கூறினார். இதனை அடுத்து திரையுலக பிரபலங்கள் பலர் வருகை தந்தனர் என்பதும் குறிப்பாக கமல்ஹாசன், ரஜினிகாந்த், விக்ரம், சூர்யா உட்பட பலர் வருகை தந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகியது. அதேபோல் மணிரத்னம் தனது மனைவி சுகாசினியுடன் வந்திருந்தார் என்பதும் நயன்தாரா தனது கணவர் விக்னேஷ் சிவனுடன் வந்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.



இந்த நிலையில் நேற்று நடைபெற்ற ஷங்கர் மகள் திருமணத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா விஜய் கலந்து கொண்டார். அவர் இந்த திருமணத்தில் கலந்து கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன. விஜய் தற்போது ரஷ்யாவில் ‘கோட்’ படத்தின் படப்பிடிப்பில் இருப்பதால் அவரால் திருமணத்தில் கலந்து கொள்ள முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.



விஜய் கலந்து கொள்ளாததால் தான் சங்கீதா இந்த திருமணத்தில் கலந்து கொண்டாரா? அல்லது விஜய்யின் சார்பில் அவர் கலந்து கொண்டாரா? என்பது தெரியவில்லை. விஜய் மற்றும் சங்கீதா பிரிந்து இருப்பதாக கூறப்படும் நிலையில் விஜய் வராத ஒரு திருமண விழாவில் சங்கீதா கலந்து கொண்டிருப்பதால் இருவரும் பிரிந்து தான் வாழ்கிறார்கள் என்பது உறுதி செய்யப்படுகிறதா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

Advertisement

Advertisement