• Jan 19 2025

நல்லவேளை.. நூலிழையில் உயிர் தப்பினேன்.. ‘கயல்’ சீரியல் நடிகைக்கு ஏற்பட்ட அதிர்ச்சி விபத்து..!

Sivalingam / 9 months ago

Advertisement

Listen News!

கயல் சீரியலில் நடித்து வரும் சைத்ரா ரெட்டி சமீபத்தில் காரில் சென்று கொண்டிருக்கும் போது ஒரு விபத்தை சந்தித்ததாகவும் அப்போது நூலிழையில் உயிர் தப்பியதாகவும் புகைப்படத்துடன் கூடிய பதிவை தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

 சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’கயல்’ என்ற சீரியலில் கயல்விழி என்ற நாயகி கேரக்டரில் நடித்து வருபவர் சைத்ரா ரெட்டி. இந்த சீரியல் கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் பெரும் வரவேற்பை பெற்று ஒளிபரப்பாகி வருகிறது. ‘கயல்’ மட்டும் இன்றி அவர் ’கல்யாண முதல் காதல் வரை’ ’யாரடி நீ மோகினி’ ’மாயத் தோட்டா’ உள்ளிட்ட சீரியல்களில் நடித்துள்ளார். அதேபோல் அஜித் நடித்த ’வலிமை’ படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகை சைத்ரா ரெட்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் சந்தித்த ஒரு விபத்து குறித்து பதிவு செய்துள்ளார். நள்ளிரவு ஒரு மணி அளவில் நான் என் வேலையை முடித்துவிட்டு போரூர் மேம்பாலம் பகுதியில் காரில் சென்று கொண்டிருந்தேன். அப்போது திடீரென மெட்ரோ கட்டுமான பணியில் பயன்படுத்தப்படும் சிமெண்ட் கலவை என் காரின் மீது விழுந்தது. இதனால் நான் அதிர்ச்சி அடைந்தேன். அதிர்ஷ்டவசமாக நான் காயமடையவில்லை என்றாலும் எனது காரில் சிமெண்ட் கலவை ஒட்டிக்கொண்டது. அதை பழுது பார்க்க பெரும் செலவு செய்தேன்.

இது எனக்கு பெரும் கவலையை எழுப்பி உள்ளது, எந்தவிதமான பாதுகாப்பு நடவடிக்கைகள் இல்லாமல் கட்டுமான பணிகள் மேற்கொள்வது, அதனால் ஏற்படும் அபாயம் குறித்து எந்தவிதமான எச்சரிக்கையும் செய்யாமல் பணி செய்து கொண்டிருக்கின்றனர். நான் காரில் வந்ததால் உயர் தப்பித்தேன், இதுவே மோட்டார் சைக்கிளில் வந்தவர்களுக்கு நேர்ந்தால் என்ன நடந்திருக்கும் என்பதை நினைத்து பார்க்கவே அச்சமாக இருக்கிறது

பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய மெட்ரோ பணி ஒப்பந்ததாரர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும், உடனடியாக இது குறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் தனது பழுதடைந்த காரின் புகைப்படத்தையும் அவர் பதிவு செய்துள்ள நிலையில் அவருக்கு ரசிகர்கள் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.


Advertisement

Advertisement