• Jan 19 2025

குழலி கேட்ட ஒரே ஒரு கேள்வி.. தங்கமயில் அதிர்ச்சி.. நிச்சயதார்த்தம் நிறுத்தப்படுகிறதா?

Sivalingam / 9 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’  சீரியல் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் இன்றைய எபிசோடில் பாண்டியன் குடும்பத்தினர் நிச்சயதார்த்தத்துக்கு தங்கமயில் வீட்டுக்கு செல்லும் காட்சிகள் உள்ளன.

முன்னதாக நிச்சயதார்த்தத்திற்கு செல்லும் முன் பாண்டியன், கோமதியின் அண்ணன் குடும்பத்தினரை எகத்தாளமாக பேச அதற்கு கோமதி அண்ணன்கள் இருவரும் ஆத்திரப்படுகின்றனர். ஆனால் அதே நேரத்தில் கோமதி அம்மா அவர்களை சமாதானப்படுத்த முயற்சி செய்கிறார். இந்த நிலையில் இந்த நிச்சயதார்த்தம் நடக்கட்டும், கல்யாணம் எப்படி நடக்குதுன்னு பார்க்கிறேன் என்று சவால் விடும் காட்சிகளும் உள்ளன.

இந்த நிலையில் நிச்சயதார்த்தத்திற்கு செல்லும் பாண்டியன் குடும்பத்தினரை வரவேற்கும் தங்கமணி பெற்றோர் அவர்களை உட்கார வைத்து உபசரிக்கிறார்கள். இதையடுத்து தங்க மயிலுக்கு நிச்சயதார்த்த சேலையை கொடுக்க கோமதி முயலும் போது ’நாத்தனார் நான் தான் கொடுப்பேன்’ என்று குழலி வாதம் செய்கிறார். அதன் பிறகு நாத்தனார் கையில் சேலை வாங்கிக் கொண்டு செல்லும் தங்கமயில் எனக்கு இந்த சேலை பிடிக்கவே இல்லை என தனது சகோதரியிடம் கூறுகிறார்.



அப்போது திடீரென குழலி, மீனா, ராஜி, அரசி ஆகியோர் உள்ளே வருகின்றனர். மற்ற மூவரும் அமைதியாக இருக்க குழலி மட்டும் தங்க மயிலை கேள்வி மேல் கேள்வி கேட்டு குடைகிறார். குறிப்பாக உனக்கு சமைக்க தெரியுமா? நீ என்ன படித்திருக்கிறாய்? என் குழந்தைகளுக்கு நீ தான் டியூஷன் எடுக்க வேண்டும்? என்று அடுக்கடுக்காக கேள்வி கேட்டு வரும் குழலி ஒரு கட்டத்தில் திடீரென தங்கமயில் கழுத்தில் இருக்கும் நகையை பார்த்து ’இது எத்தனை பவுன்? என்று கேட்கிறார்.

தங்கமயில் தனது கழுத்தில் கவரிங் நகை தான் போட்டிருக்கும் நிலையில் குழலிக்கு பதில் சொல்ல முடியாமல் திணறிக் கொண்டிருக்கும் போது அவருடைய அம்மா வருகிறார். குழலியை ஆத்திரமாக பார்க்கிறார். குழலி கேட்ட இந்த ஒரே ஒரு கேள்வி தங்கயிலை அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய நிலையில்  இது சம்பந்தமாக ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டு நிச்சயதார்த்தம் நிறுத்தப்படுமா? என்பதை எல்லாம் அடுத்தடுத்து வரும் எபிசோடுகளில் பார்ப்போம்.

Advertisement

Advertisement