• Feb 12 2026

அடேங்கப்பா.! "டாக்ஸிக்" பட ஹீரோயின்களின் சம்பள விபரத்தைப் பார்த்து ஷாக்கில் ரசிகர்கள்.!

subiththira / 3 weeks ago

Advertisement

Listen News!

2026ஆம் ஆண்டு வெளியாகும் திரைப்படங்களில் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படங்களில் ஒன்று ‘டாக்ஸிக்’ (Toxic). கேஜிஎப் மூலம் இந்திய அளவில் சூப்பர் ஸ்டாராக உயர்ந்த நடிகர் யாஷ் இந்த படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகும் இந்த படம், பான்-இந்தியா திரைப்படமாக தயாராகி வருவது குறிப்பிடத்தக்கது.


‘டாக்ஸிக்’ படத்தில் யாஷ் மட்டுமல்லாமல், இந்திய சினிமாவின் முன்னணி நடிகைகள் பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துவருகிறார்கள்.

அதாவது,நயன்தாரா,ருக்மிணி வசந்த்,கியாரா அத்வானி,ஹுமா குரேஷி மற்றும் தாரா சுதாரியா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர். இதனால் இந்த படம் வெளியாவதற்கு முன்பே இந்திய சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரும் கவனம் பெற்றுள்ளது.

‘டாக்சிக்’ படத்தை, வித்தியாசமான கதையமைப்புகளுக்காக பெயர் பெற்ற இயக்குநர் கீது மோகன்தாஸ் இயக்கி வருகிறார். ஆக்ஷன் மற்றும் டிராமா கதைக்களத்தில் உருவாகும் இந்த படம், யாஷின் நடிப்பில் ஒரு புதிய பரிமாணத்தை வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.


பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகும் ‘டாக்ஸிக்’ படம் குறித்து அவ்வப்போது வெளியாகும் தகவல்கள் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி வருகின்றன. அந்த வகையில், இந்த படத்தில் நடிக்கும் முக்கிய நடிகர்களின் சம்பள விவரம் தற்போது வெளியாகி, சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ஏற்கனவே வெளியான தகவலின்படி, இந்த படத்தில் நடிக்க நடிகர் யாஷ் ரூ.50 கோடி சம்பளம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. ‘கேஜிஎப்’ படங்களின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு, யாஷ் இந்திய சினிமாவின் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவராக மாறியுள்ளார்.

இந்த படத்தில் முக்கிய பெண் கதாபாத்திரத்தில் நடிக்கும் நயன்தாரா, ரூ.18 கோடி சம்பளம் பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பான்-இந்தியா படங்களில் தொடர்ந்து நடித்து வரும் நயன்தாரா, இந்த படத்தின் மூலம் மீண்டும் ஒரு பெரிய கமர்ஷியல் முயற்சியில் இணைந்துள்ளார்.

தற்போது வெளியாகியுள்ள புதிய தகவலின்படி, ருக்மிணி வசந்த் – ரூ.5 கோடி மற்றும் கியாரா அத்வானி – ரூ.5 கோடி சம்பளமாக பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

இருவரும் படத்தில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வருவதாகவும், கதையின் முக்கிய திருப்பங்களுக்கு இவர்களின் வேடங்கள் முக்கிய பங்கு வகிக்கும் என்றும் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement