பிரபல ஸ்ட்ரீமிங் தளம் ZEE5, தனது புதிய தமிழ் ஒரிஜினல் சீரிஸான ‘தடயம்’ குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி குறித்த வெப் சீரிஸ் பிப்ரவரி 27 முதல் ZEE5 தளத்தில் ஒளிபரப்பாக உள்ளது.
1999ஆம் ஆண்டில் தமிழ்நாடு – ஆந்திரப் பிரதேச எல்லைப் பகுதிகளில் நிகழ்ந்த உண்மை கொலை சம்பவங்களை மையமாகக் கொண்டு இந்த ‘தடயம்’ சீரிஸ் எடுக்கப்பட்டுள்ளது..
மேலும் பயங்கரமான தொடர் கொலைகளை மீண்டும் நினைவூட்டி, பார்வையாளர்களை அச்சமூட்டும் அனுபவத்திற்கு உட்படுத்தவுள்ளது. இந்த கொலைகளில் பணம் அல்லது நகைகள் எதுவும் கொள்ளை போகவில்லை.. மாறாக, திருமண சின்னங்களான கணவரின் அரைஞாண் கயிறு, மனைவியின் தாலி மட்டுமே திருடப்பட்டுள்ளன.

‘தடயம்’ சீரிஸை நவீன்குமார் பழனிவேல் எழுதி இயக்கியுள்ளார். முக்கிய கதாபாத்திரங்களில் சமுத்திரக்கனி SI ஆதியமான், ஷிவதா இன்ஸ்பெக்டர் லக்ஷ்மி வேடத்தில் நடித்துள்ளனர்.
இந்த சீரிஸில் ராஜ் திரன்தாஸ், மூணார் ரமேஷ், சுந்தரபாண்டியன், பிரேம், கொற்றவை, விசாகன், புலிப்பாண்டி, அபிஷேக் ஜோசப் ஜார்ஜ், ரவிச்சந்திரன், கார்த்தி, சுபர்ணா மற்றும் தயாளன் ஆகியோரும் உள்ளனர்.
Listen News!