• Mar 26 2026

யார் யாருக்கோ தேசிய விருது கொடுக்கிறாங்க.. சரத் குமார் ஓபன் டாக்

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

தமிழ்நாடு அரசின் சார்பில் சமீபத்தில் அரசு திரைப்பட விருதுகள்,  சின்னத்திரை விருதுகள் மற்றும் கல்வி ஆண்டுகளுக்கான எம்.ஜி.ஆர். திரைப்பட விருதுகள்  வழங்கப்பட்டன.

திரைப்பட விருதுகளில் விஜய் சேதுபதி, கார்த்தி, தனுஷ், சூர்யா, ஆர்யா, விக்ரம் பிரபு, ஆர். பார்த்திபன் சிறந்த நடிகர்களாக தேர்வு செய்யப்பட்டனர். நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், ஜோதிகா, மஞ்சுவாரியார், அபர்ணா பாலமுரளி, லிஜோமோல்ஜோஸ், சாய்பல்லவி சிறந்த நடிகைகளாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

மேலும், சிறந்த திரைப்படங்களில் மாநகரம், அறம், பரியேறும் பெருமாள், அசுரன், கூழாங்கல், ஜெய்பீம், கார்கி ஆகிய படங்கள் அடங்கின.

சிறந்த திரைப்படங்களுக்கு ரூ.2 லட்சம் முதல் பரிசு, நடிகர்-நடிகைகளுக்கு தங்கப்பதக்கம், நினைவுப் பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.


இந்த நிலையில், யார் யாருக்கோ எல்லாம்  தேசிய விருது கொடுக்கிறாங்க ஆனால்   ராதிகாவுக்கு தேசிய விருது கிடைக்கவில்லை என மனம் திறந்து பேசியுள்ளார் சரத்குமார். 

அதன்படி அவர் கூறுகையில், இந்தியாவிலேயே ஒரு சிறந்த நடிகை ராதிகாத்தான். ஆனால் அவங்களுக்கு ஏன் இன்னும் தேசிய விருது கொடுக்கவில்லை என்று தெரியவில்லை. யார் யாருக்கோ தேசிய விருது கொடுக்கிறாங்க. ஆனால் அவங்களுக்கு கொடுக்காதது எனக்கு வருத்தம். 

எம். ஆர். ராதா எவ்வளவோ பெரிய நடிகர். அவருடைய பெயரை காப்பாற்றியது ராதிகாவும், ராதா ரவியும் தான் என்று தெரிவித்துள்ளார். 

Advertisement

Advertisement