• May 05 2026

விஜய் டீவியிலிருந்து வந்தாலே SK ஆகிடமுடியுமா.? VJ பப்புவின் கலக்கலான பேச்சு.!

shali / 2 months ago

Advertisement

Listen News!

சமீபத்திய ஒரு நேர்காணலில், விஜய் டிவி மூலம் பிரபலமான VJ பப்பு பகிர்ந்த கருத்துக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. குறிப்பாக, தொலைக்காட்சி துறையில் வாய்ப்புகள், திறமை, மற்றும் ஒப்பீட்டு மனப்பான்மை குறித்து அவர் பேசிய விதம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

நேர்காணலில் பேசும்போது, “விஜய் டிவியில நிறைய ஆங்கர் இருப்பாங்க, ஆனா 10 பேர் தான் நமக்குத் தெரியும். அதே மாதிரி 1000 திறமை உள்ள காமெடியன்கள் இருக்காங்க. ஆனா, ஒரு 10 பேர் தான் வெளிய தெரிவாங்க.. 


விஜய் டிவியில் இருந்து வந்தாலே சிவகார்த்திகேயன்னு நினைக்கிறாங்க. ஆனா, நிஜத்தில் அப்படி கிடையாது. ஏன்னா, ஒரு ரஜினி தான். ஒரு விஜய் தான். ஒரு அஜித் தான். அவங்கவங்க அவங்க தான். அவங்க இடத்தைப் பிடிக்கணும்னு நம்ம நினைச்சா நாம காலி, நம்ம வேலையை ஒழுங்கா பார்க்கணும்." என்று கூறியிருந்தார். 

இந்த வார்த்தைகள், மீடியா துறையில் உள்ள போட்டி நிலையை வெளிப்படுத்துவதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். திறமை உள்ளவர்கள் பலர் இருந்தாலும், எல்லோருக்கும் ஒரே அளவு வெளிச்சம் கிடைப்பதில்லை என்பதே அவரது கருத்தின் மையமாக காணப்படுகின்றது. 

Advertisement

Advertisement