• Dec 26 2024

சிகாகோ நகருக்கே அழகு சேர்த்த உலக நாயகன்.. புதிய ஸ்டைலில் வெளியான போட்டோஸ்

Aathira / 1 week ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான கமலஹாசன் அமெரிக்காவில் ஏஐ டெக்னாலஜி படிப்பை மேற்கொள்வதற்காக அங்கு சென்றுள்ளார். கமலஹாசனுக்கு 70 வயதான போதும்  இன்றைய தலைமுறையுடன் தனது திறமையை மேலும் விஸ்தரிக்க முனைந்துள்ளார்.

தமிழ் சினிமாவில் புதிய தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்த கமலஹாசன், இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர் என பன்முகம்  கொண்டுள்ளார். தற்போது மணிரத்தினம் இயக்கத்தில் தக்லைப்  படத்தில் நடித்து வருகின்றார். இந்த படத்திற்கான படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

கமலஹாசன் நடிப்பில் இறுதியாக வெளியான இந்தியன் 2 திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியானது. ஆனாலும் இந்த திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று தோல்வியை தழுவியது. வசூலிலும் சரிவை சந்தித்தது.


தக்லைப் படத்திற்குப் பிறகு இயக்குனர் அன்பறிவு இயக்கத்தில் மற்றும் ஒரு படத்தில் கமலஹாசன் நடிக்க உள்ளதாக  தகவல்கள் வெளியாகி இருந்தன. எனினும் இதற்கு இடையில் செயற்கை  நுண்ணறிவு டெக்னாலஜி தொடர்பான படிப்பை மேற்கொள்வதற்காக அமெரிக்க சென்றுள்ளார். 


தற்கால இளைஞர்களுக்கு டாப் கொடுக்கும் வகையிலே  அவர்களுக்கு நிகராக தன்னை நிலைநிறுத்த முயற்சி செய்து வருகிறார் உலக நாயகன்.

இந்த நிலையில், கமலஹாசன் அமெரிக்காவில் உள்ள சிகாகோ நகரில் பாலத்திற்கு அருகில் நின்று எடுத்துக்கொண்ட புதிய புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி உள்ளன. 

இதேவேளை, தனது தொழில்நுட்ப அறிவின் மூலம் இந்திய சினிமாவில் குறிப்பிடதக்க தாக்கத்தை ஏற்படுத்தும் முக்கிய நபர்களில் கமலஹாசனும் ஒருவராக திகழ்வார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement