• Feb 20 2026

விஜய் சார் ரொம்ப Punctual... நடிகரின் நேர்த்தி குறித்து மனம் திறந்த மமிதா பைஜூ.!

subiththira / 1 day ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள திரைப்படங்களில் ஒன்றாக தற்போது பேசப்படுவது ‘ஜனநாயகன்’. H. வினோத் இயக்கத்தில், விஜய் நடிப்பில் உருவாகியுள்ள இந்த படம், வெளியீட்டுக்கு முன்பே பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. முக்கியமாக, இது விஜயின் கடைசி திரைப்படமாக இருப்பதால், ரசிகர்கள் மத்தியில் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு உச்சத்தை எட்டியுள்ளது.


‘ஜன நாயகன்’ படம் ஜனவரி 9ஆம் தேதி வெளியாகும் என ஆரம்பத்தில் தகவல்கள் வெளியானது. இதனால், புத்தாண்டு தொடக்கத்தில் ரசிகர்கள் கொண்டாடும் வகையில் ஒரு பெரிய திரையரங்கு விழா அமையும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தணிக்கை சான்றிதழ் (Censor Certificate) இதுவரை வழங்கப்படாத காரணத்தால், படம் அறிவிக்கப்பட்ட தேதியில் வெளியாகவில்லை.

இது ரசிகர்களிடையே சிறிய ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், புதிய வெளியீட்டு தேதி குறித்த ஆர்வத்தையும் தூண்டியுள்ளது. தயாரிப்பு தரப்பில் இருந்து விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், ‘ஜனநாயகன்’ படத்தில் நடித்துள்ள மமிதா பைஜூ, சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் விஜய்யுடன் பணிபுரிந்த தனது அனுபவத்தை பகிர்ந்து கொண்டார். அவரது பேச்சு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


அவர் அதன்போது, “விஜய் சார் ரொம்ப punctual. மிகவும் sweet ஆனவர். நான் சொன்ன ஒரு சின்ன விஷயத்தை கூட இரண்டு மாதம் கழிச்சு நினைவுல வைத்திருப்பார். அந்த விஷயத்தை நானே மறந்து போயிருப்பேன். அவர் திடீரென்று அதைப் பற்றி என்னிடம் கேட்பார்.” என்று கூறியிருந்தார்.

Advertisement

Advertisement