தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர் ஷங்கர் இறுதியாக இயக்கிய இந்தியன் 2, கேம் சேஞ்சர் ஆகிய படங்கள் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. அவை கலவையான விமர்சனங்களை பெற்றதுடன் வசூல் ரீதியாகவும் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. இதனால் படக்குழுவினர் இடையே ஏமாற்றம் ஏற்பட்டது.
இந்த நிலையில், எழுத்தாளரும் எம்.பி.யுமான சு. வெங்கடேசன் எழுதிய புகழ்பெற்ற வரலாற்று நாவல் ‘வீரயுக நாயகன் வேள்பாரி’யை திரைப்படமாக்கும் பணிகளில் ஷங்கர் தீவிரம் காட்டி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

முன்னதாக, இப்படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு ஜூன் மாதம் தொடங்கும் என்றும், இதில் நடிகர் சூர்யா நடிக்க வாய்ப்பு உள்ளதாகவும் பேசப்பட்டது.
ஆனால் தற்போது புதிய திருப்பமாக, ஷங்கர் இந்த கதையை தனுஷிடம் கூறியதாகவும், அதற்கு அவர் சம்மதம் தெரிவித்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தனுஷ் தற்போது பல படங்களில் பிஸியாக இருப்பதால், ஷங்கருடன் இந்த ஆண்டு இறுதியில் அல்லது அடுத்த ஆண்டு இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
Listen News!