• Feb 20 2026

சத்யாவுக்கு ப்ரொபோஸ் பண்ணிய சிந்தாமணியின் மகள்.! விஜயா போட்ட கண்டிஷன்

Aathira / 1 day ago

Advertisement

Listen News!

சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட்டில், சிந்தாமணியின் மகள் சத்யா வீட்டிற்கு வருகிறார். அங்கு மொட்டை மாடியில் சத்யா இருக்கும்போது, அவரிடம் சென்று 'நான் உங்களை காதலிக்கிறேன். நாங்கள் கல்யாணம் பண்ணலாமா?' என்று ஓப்பனாக கேட்கிறார். இதை கேட்டு சத்யா அதிர்ச்சி அடைகிறார்.

அதன்பின், மீனா வீட்டில் உள்ள அனைவரிடமும், ரோகிணி தன்னை ஸ்ருதியின் ரெஸ்டாரண்டில் வந்து பார்த்த விஷயத்தையும், க்ரிஷ்க்கு உடல்நிலை சரியில்லை என்பதால் அவன் முத்து, மீனா என புலம்பிக் கொண்டிருப்பதாகவும், அவரை ஒரு தடவை வந்து பார்த்துவிட்டு செல்லுமாறு ரோகிணி சொன்ன விஷயத்தையும் அனைவரிடமும் மீனா கூறுகிறார்.

இதைக் கேட்டு கோபமடைந்த விஜயா, அவனை பார்க்கப் போகத் தேவையில்லை என்று கண்டிஷன் போடுகிறார். ஆனாலும் அண்ணாமலை, அவனுக்கு உண்மையிலேயே உடல்நிலை சரியில்லையா என்பதை அவனுடைய வீட்டிற்கு செல்லாமலே கண்டுபிடியுங்கள் என்று சொல்கிறார்.


இதனைத் தொடர்ந்து ரோகிணியின் வீட்டிற்கு வந்த சிந்தாமணி, க்ரிஷ் பற்றி விசாரித்துவிட்டு, ரோகிணியிடம் பேச, அவர் முத்து, மீனாவை வரச் சொல்லிய விஷயத்தை கூறுகிறார். இதனால் அதைத் தடுக்க வேண்டும் என்று நினைத்த சிந்தாமணி, மனோஜின் பெயரை க்ரிஷ் சொல்லி புலம்புவதாக கூறி, மனோஜை வீட்டிற்கு வரவழைக்க ஐடியா கொடுக்கிறார்.

இன்னொரு பக்கம், நீத்துவின் வீட்டிற்கு சென்ற ஸ்ருதியின் அப்பா அம்மா, அவரிடம் தனது மகளின் வாழ்க்கையை விட்டு போகுமாறு கூறுகின்றனர். மேலும் 9 லட்சம் ரூபாய் செக்கையும் கொடுக்கிறார்கள். அதற்கு நீத்து, 'எனக்கு இந்த செக் வேண்டாம். நான் ரவியை லவ் பண்ணுகிறேன். உங்கள் மகளின் வாழ்க்கைக்குள் வரமாட்டேன். ஆனால் ரவியை நான் காதலிக்கிறேன்' என்று கூறுகிறார். இதனால் ஸ்ருதியின் பெற்றோரும் கோபத்தில் அவரை திட்டிவிட்டு செல்கின்றனர். இதுதான் இன்றைய எபிசோட்.

Advertisement

Advertisement