• Jan 15 2025

டானியல் பாலாஜிக்கு இறுதி அஞ்சலி செலுத்திய விஜய் சேதுபதி.. ராதிகா உருக்கம்..!

Sivalingam / 9 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் வில்லனாக பல முன்னணி நடிகர்களுடன் நடித்து வந்த டானியல் பாலாஜி நேற்றைய தினம் மாரடைப்பால் மரணமடைந்தது பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 48 வயதாகிய இவரது இந்த இறப்பு ஏற்றுக்கொள்ள முடியாத நிலையில் பல சினிமா பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அவ்வாறே பொதுமக்களின் பார்வைக்காக கீழ்ப்பாக்கத்தில் உள்ள இவரது வீட்டில் உடல் வைக்கப்பட்டுள்ளது. அவரது வீட்டிற்க்கு சென்று கெளதம் வாசுமேனன் , வெற்றிமாறன் ,அமீர் ஆகியோர் இறுதி அஞ்சலி செலுத்திய காணொளிகள் வைரலாகி வரும் நிலையில் தற்போது மக்கள் செல்வன் விஜய் சேதுபதி அவரது வீட்டிற்க்கு சென்றுள்ளார். அங்கு சென்ற அவர் பாலாஜியின் குடும்பத்தினரையும் சந்தித்துவிட்டு பாலாஜியின் உடல்முன் நின்று வணங்கி விட்டும் சென்றார். இதனை தொடர்ந்தே நடிகை ராதிகா சரத்குமார் இவரது மரணம் பற்றி உருக்கமான பதிவொன்றாயும் பதிவிட்டுள்ளார்.

அதில் அவர் கூறுகையில் "இதை என்னால் நம்ப முடியவில்லை , டானியல் பாலாஜி எங்களுடைய சித்தி நாடக தொடர் ஊடாக அறிமுகமாகிய திறமை மிக்க நடிகர் , சித்தி சீரியலில் வில்லனாக நடித்தும் அவருக்கு பெரும் புகழ் கிடைத்தது , அருமையான மனிதர் அவர் அவரது பிரிவு என்னை துயரில் ஆழ்த்துகிறது , அவரது ஆத்மா சாந்தி அடையட்டும்" என நடிகை ராதிகா சரத்குமார் அவரது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Advertisement

Advertisement