• May 05 2026

அரை சதம் அடிக்கப்போகும் விஜய் சேதுபதி! அவரோட நடிப்புக்கு சரியான தீனி! ரிலீஸ் டேட் அறிவிப்பு!

Nithushan / 2 years ago

Advertisement

Listen News!

சினிமாவில் நடித்தால் நான் ஹீரோவாகத்தான் நடிப்பேன் என கூறி தற்காலத்தில் இருக்கும் அடையாளமே தெரியாமல் போன நடிகர்கள் ஏராளம். ஆனால் இப்படி எதுவும் இன்றி ஹீரோ , வில்லன் , துணைக்கதாபாத்திரம் என எந்த வேடம் கிடைத்தாலும் தனது நடிப்பு திறமையால் அந்த கதாபாத்திரத்தை பேசுபொருளாக மாற்றக்கூடியவர் விஜய்சேதுபதி ஆவார்.


தமிழில் பல படங்களில் துணை கதாபாத்திரமாக நடித்த விஜய் சேதுபதி தென்மேற்கு பருவக்காற்று என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். தொடர்ந்து பல ஹிட் படங்களில் நடித்த இவர் தமிழ் மட்டுமின்றி ஹிந்தி , தெலுங்கு , மலையாளம்  என பல மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இந்த நிலையிலேயே இவரது 50 ஆவது திரைப்படத்திற்கான அறிவுப்பு ஒன்று வெளியாகி உள்ளது.


நித்திலன் சுவாமி நாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் திரைப்படம் மஹா ராஜா ஆகும். பொதுவாகவே விஜய் சேதுபதி நடிக்கும் நெகட்டிவ் கதாபாத்திரங்கள் பெரிய அளவில் பேசப்படும். அவ்வாறே குறித்த படத்திலும் அவர் நெகட்டிவ் ரோலில் நடிக்கலாம் என எதிர்பார்க்கபடும் நிலையில் குறித்த திரைப்படம் மே மாதம் வெளியாகும் எனவும் தற்காலிக திகதியாக மே 16 தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றும் தகவல் வெளியாகி உள்ளது.   


Advertisement

Advertisement