நடிகர் விஜய் தேவரகொண்டா தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவர் இவர் நடிப்பில் கடைசியாக தி பேமிலி ஸ்டார் எனும் படம் வெளிவந்து, தற்போது விஜய் தேவரகொண்டா சஹிபா என்கிற இந்தி ஆல்பம் பாடலில் நடித்துள்ளார். இதற்கான ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இவர் தனது காதல் பற்றி கூறியுள்ளார்.
"எனக்கு தற்போது 35 வயது ஆகிறது. நான் சிங்கிளாக இருப்பேன் என நினைக்கிறீர்களா? என நகைச்சுவையாக பேசினார். பின், "என்னுடன் நடித்த சக நடிகையை நான் டேட்டிங் செய்துள்ளேன்" என ஒப்புக்கொண்டார். எனக்கு காதலிக்கப்படுவது எப்படிப்பட்ட உணர்வு என்று தெரியும்,என்னுடைய காதல் சில கண்டிஷன்களுடன் தான் இருக்கும்" என கூறியுள்ளார்.
யாராக இருக்கும் என பலரும் குழம்பி இருந்தாலும் நடிகை ராஷ்மிக்கா மந்தனா விஜய் தேவரகொண்டாவுடன் நடித்தார் என்பது தெரியும். அதன் பின்னர் இவர்கள் டேட்டிங் சென்றது, ஒன்றாக இருக்கும் புகைப்படங்கள் எல்லாமே வைரலாகி வந்தது. இந்நிலையில் ரசிகர்களும் உறுதியாக ராஷ்மிக்காத்தான் அந்த காதலி என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.
Listen News!