• Sep 20 2024

தனது படத்தின் அப்டேட்டை ஹாட் போட்டோவுடன் வெளியிட்ட விஜய் தேவர்கொண்டா..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

சின்னத்திரை சீரியல் இயக்குநராக தனது கலை பயணத்தை தொடங்கிய விஜய் தேவரக்கொண்டா, Nuvvila என்னும் திரைப்படத்தின் மூலம் திரையுலகில் என்ரி கொடுத்தார்.. Life is Beautiful, Yevade Subramanyam போன்ற திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்து அசத்தி இருந்தார்.

இதன் பின்னர், Pelli Choopulu என்னும் படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தின் மூலம் இந்திய திரையுலகில் பெரும் பிரபலம் அடைந்தார். இப்படத்திற்காக பல விருதுகளையும் பெற்றார். இதனைத் தொடர்ந்து, Ye Mantram Vesave, நோட்டா, World Famous Lover, Dear Comrade, கீதா கோவிந்தம் போன்ற திரைப்படங்களில் நடித்தார்.

எனினும் தற்போது, சமந்தாவுடன் குஷி, பூஜா ஹெக்டேவுடன் Jana Gana Mana, Liger போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார். பிரபல தெலுங்கு இயக்குநர் பூரி ஜெகன்நாத் இயக்கும் Liger திரைப்படத்தில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை அனன்யா பாண்டே நடித்து வருகிறார். மேலும் இப்படம் ஒரே நேரத்தில் தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய இரண்டு மொழிகளிலும் படமாக்கப்பட்டு உள்ளது.

அத்தோடு இதுதவிர தமிழ், கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் இப்படம் டப்பிங் செய்து வெளியிடப்பட உள்ளது. இப்படத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டா குத்துச் சண்டை வீரராக நடித்துள்ளார். லிகர் படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றதாம்.

இப்படம் வருகின்ற ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி சுதந்திர தினத்தன்று வெளியாகுமென ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது அப்படத்தின் புதிய போஸ்டர் ஒன்று வெளியாகி இணையத்தில் ட்ரெண்ட் ஆனது. மேலும் அதில் நடிகர் விஜய் தேவரகொண்டா கையில் ரோஜா பூங்கொத்துடன் நிர்வாணமாக நிற்கும் படியான போட்டோ இடம்பெற்றது. இதைப்பார்த்து ரசிகர்கள் ஷாக் ஆகி அதனை ட்ரெண்ட் செய்தனர்.

இந்நிலையில் இப்படம் குறித்து அறிவிப்பு ஒன்றை விஜய் தேவரகொண்டா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.மேலும் அதில், இப்படத்தின் டீசர் ஜூலை 8ம் தேதி வெளியாகுமெனவும், முதல் பாடல் ஜூலை 11ம் தேதி வெளியாகும் எனவும் படக்குழு போஸ்டர் மூலம் அறிவித்துள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement