• Sep 20 2024

நடிகர் அஜித்தின் 30 வருட நிறைவை ஒட்டி 10 புகைப்படங்களைப் பதிவிட்டு வாழ்த்துக் கூறிய விக்னேஷ் சிவன்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என 4 மொழிகளிலும் ரிலீஸாகி 200 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்து வெற்றி அடைந்த திரைப்படம் தான் வலிமை. இப்படத்தை எச். வினோத் இயக்கியிருந்தார்.

இதனைத் தொடர்ந்து எச்.வினோத்- போனிகபூர் கூட்டணியில் அஜித் மூன்றாவது முறையாக இணைந்து நடித்து வருகின்றார். இப்படத்திற்கு தற்சமயம் AK 61 என்று வைக்கப்பட்டுள்ளது.

ஐதராபாத் & சென்னையில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்தது.AK61க்கு பின் நடிகர் அஜித்தின் 62 வது படத்தை இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்க உள்ளதாக சில நாட்களுக்கு முன் அறிவிப்பு வெளியாகி உள்ளது.இந்த அறிவிப்பு அஜித் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வரவேற்பை பெற்றது.

அனிருத் இசையில், லைக்கா சுபாஸ்கரன் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு இறுதியில் தொடங்கி அடுத்த ஆண்டு மத்தியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நடிகர் அஜித் குமார், சினிமா உலகில் நடிகராக அறிமுகமாகி 30 வருடங்கள் நிறைவடைவதை ஒட்டி பல பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகின்றனர்.

இந்த நாளுக்காக அஜித் ரசிகர்கள் Common DP, Mash Up, Poster Design செய்து கொண்டாடி வருகின்றனர்.இச்சூழலில் இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகர் அஜித்தின் ஆரம்பகால திரைப்படங்களான காதல் மன்னன், வாலி, முகவரி, வில்லன், பில்லா, ஆரம்பம், மங்காத்தா, விஸ்வாசம், நேர்கொண்ட பார்வை, AK61 படங்களில் உள்ள அஜித்தின் பல விதமான கெட்-அப் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில் "30 ஆண்டுகால சிறப்பு!தன்னம்பிக்கையின் முப்பது ஆண்டுகள்… தன்னம்பிக்கை, ஆர்வம், இரக்கம், பணிவு, பரிவு, விடாமுயற்சி, கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவை இந்த மனிதனை 30 ஆண்டுகளாக மக்களின் இதயங்களை ஆள வைத்துள்ளது!

இன்னும் பல வருடங்கள் உங்களைப் பார்ப்பதில் மகிழ்ச்சியுடன் இருக்க, நாங்கள் பிரார்த்தனை செய்கிறோம் மற்றும் அதையே விரும்புகிறோம்! நன்றி அன்புள்ள அஜித் சார் ❤️" என விக்னேஷ் சிவன் கூறியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சீரியல் பக்கம் இனிமேல் திரும்பிக் கூட பார்க்க மாட்டேன்- அதிர்ச்சித் தகவலைக் கூறிய ப்ரஜன்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement