• May 19 2024

மார்டன் லுக்கில் நடிகர் அஜித்தின் மச்சினிச்சி வெளியிட்ட வீடியோ- வைரலாக்கி வரும் ரசிகர்கள்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் ஒரு கால கட்டத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தான் ஷாலினி. இவர் நடிகர் அஜித்தை திருமணம் செய்ததால் நடிப்பிலிருந்து விலகியுள்ளார். இவருக்கு ரிச்சர்ட் மற்றும் ஷாமிலி என இரு சகோதரர்கள் உள்ளனர்.

இதில் ஷாலினியின் தங்கை ஷாமிலி கடந்த 1990ஆம் ஆண்டு வெளிவந்த அஞ்சலி படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக பிரபலமானவர். இதன்பின் பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்தார்.

இதனைத் தொடர்ந்து தமிழில் விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான வீரசிவாஜி படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். தற்போது பெரிதும் பட வாய்ப்புகள் இல்லாமல் இருக்கும் ஷாமிலி, அவ்வப்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய சமீபத்திய புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை பதிவு செய்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது மார்டன் லுக்கில் அவர் வெளியிட்டுள்ள வீடியோ, ரசிகர்கள் மத்தியில் செம வைரலாகி வருவதோடு விரைவில் உங்களை நல்ல படத்தில் காண ஆவலாக உள்ளோம் எனக் கூறி வருகின்றனர்.

Advertisement

Advertisement