• May 08 2024

'அதை நான் முடிவு பண்ண முடியாது'- விஜய்யின் திரைப்படத்தை தயாரிப்பது குறித்து பேசிய தயாரிப்பாளர் போனிகபூர்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முக்கிய நடிகரான அஜித் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் நேர் கொண்ட பார்வை. இந்தத் திரைப்படத்தை தயாரிப்பாளர் போனி கபூர் தயாரித்திருந்தார்.

இப்படத்தை தொடர்ந்து சமீபத்தில் வெளிவந்த வலிமை படத்தை தயாரித்திருந்தார். மேலும், இந்த வாரம் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியாகவுள்ள நெஞ்சுக்கு நீதி படத்தையும் போனி கபூர் தயாரித்துள்ளார்.

இதுமட்டுமின்றி அஜித்தின் AK 61 மற்றும் ஆர்.ஜே. பாலாஜியின் வீட்ல விஷேஷம் படங்களையும் தயாரித்து வருகிறார் என்பதும் யாவரும் அறிந்ததே. பாலிவூட்டிலும் பல திரைப்படங்களை தயாரித்து வருகின்றார்.

இந்நிலையில், தற்போது தமிழில் முக்கிய தயாரிப்பாளராக இருக்கும் போனி கபூரிடம், எப்போது விஜய்யுடன் இணைந்து படம் பண்ண போகிறீர்கள் என்று சமீபத்திய பேட்டியில் கேள்வி கேட்கப்பட்டது.

இதற்கு பதிலளித்த போனி கபூர் ' விஜய்யுடன் படம் பண்ணுவதை நாம் முடிவு செய்யமுடியாது. கதை தான் முடிவுசெய்யவேண்டும். நல்ல கதை அமைந்தால் கண்டிப்பாக விஜய்யுடன் படம் பண்ணுவேன் ' என்று கூறியுள்ளார்.


பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement