• Sep 20 2024

அஜித்தை விட ஸ்மார்ட்டாக ஸ்டைலாக இருக்கும் அர்ஜுன்.. ‘விடாமுயற்சி’ போஸ்டர்..!

Sivalingam / 1 month ago

Advertisement

Listen News!

அஜித் நடித்து வரும் ‘விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கி உள்ள நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர், செகண்ட் லுக் போஸ்டர் ஆகியவை சமீபத்தில் வெளியாகி இணையத்தில் வைரல் ஆனது என்பதை பார்த்தோம். இந்த நிலையில் இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்து வரும் ஆக்சன் கிங் அர்ஜுன் போஸ்டர் வெளியாகி உள்ள நிலையில் இந்த போஸ்டருக்கு மிகப்பெரிய வரவேற்பு ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

அஜித் நடிப்பில், மகிழ் திருமேனி இயக்கத்தில், லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில், அனிருத் இசையில் உருவாகி வரும் திரைப்படம் ‘விடாமுயற்சி’.  இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் சமீபத்தில் இந்த படத்தில் அஜர்பைஜான் படப்பிடிப்பு முடிவடைந்தது என்பதை பார்த்தோம். இதனை அடுத்து இந்த படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடைபெற இருப்பதை அடுத்து அதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் இந்த படப்பிடிப்புடன் இந்த படத்தின் முழு படப்பிடிப்பு முடிவடைந்து விடும் என்றும் கூறப்படுகிறது.

மேலும் ‘விடாமுயற்சி’ படத்தை ஏற்கனவே தீபாவளி அன்று வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ள நிலையில் ஒரு பக்கம் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளும் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்த படத்தில் அஜித் உடன் ஆக்சன் கிங் அர்ஜுன் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்திருக்கும் நிலையில் அவருடைய போஸ்டர் சற்றுமுன் வெளியாகியுள்ளது. இந்த போஸ்டரை பார்த்த ரசிகர்கள் அஜித்தை விட ஸ்மார்டாக, ஸ்டைலாக அர்ஜுன் இருக்கிறார் என்றும் கண்டிப்பாக இந்த படம் அர்ஜுனுக்கு ஒரு திருப்புமுனையை கொடுக்கும் என்றும் கூறி வருகின்றனர்.


Advertisement

Advertisement