• Jan 15 2025

வெங்கட் பிரபுவின் தரமான சம்பவம்... இணையத்தில் வைரலாகும் தக்லைஃப் வீடியோஸ்...

subiththira / 4 months ago

Advertisement

Listen News!

தளபதி விஜய் நடிப்பில் வெளியாக இருக்கும் கோட் படத்தை இயக்கியிருக்கும் வெங்கட் பிரபு அளித்து வரும் பேட்டிகள் தான் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. அதிலும் குறிப்பாக கோட் பட ட்ரெய்லர் குறித்த செய்தியாளர்கள் சந்திப்பில் வெங்கட் பிரபு அளித்த தக்லைஃப் பதில்கள் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துவிட்டது.


விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் பெயரை தமிழக மக்கள் கழகம் என சொன்ன தளபதி ரசிகரை கலாய்த்தார் வெங்கட் பிரபு. உங்கள் தலைவர் கட்சி பெயரே தெரியல என அவர் பங்கம் பண்ண வீடியோ வெளியாகி வைரலானது. மேலும் இந்த திரைப்படம் உங்களுக்கும் விஜய் சேருக்கும் ரொம்ப முக்கியமான படம் அதுல ஏன் இளையராஜா சார் பாடலை, ட்ரெய்லர்ல ப்ரஜாவே காணல என்ன கோவம் அவங்கமேல என்று கேட்ட அதற்கு வெங்கட் பிரபு உங்களுக்கு என் கோவம் என்று கேட்டுள்ளார். 


விஜய்க்கு காந்தி பெயரை வைத்து தண்ணி அடிக்கும் சீன வைத்துள்ளீர்கள் என்றுகேட்ட என்னோட பிரட் பேரும் காந்திதான் காந்தி பேர் வச்சிட்டு அவன் பண்ணதா அட்டுழியம் இல்லை என்றுகூறுகிறார்.காந்தினு பேர் வச்சா சரக்கடிக்க கூடாதுனு இல்லையே என்று கேட்கிறார். விஜய் காந்த் இருப்பதாக சொன்னார்களே அவர் இருக்கிறாரா வேறு யார் யார் இருக்கிறார்கள்?  என்று கேட்ட அதற்க்கு எல்லாமே கேட்டுருங்க யார் யார் இருக்காரா கதை என்ன சப்பிறைஸ் எல்லாம் உடையட்டும் என்று சிரித்துக்கொண்டே சொல்கிறார். 


இனிமே குடிக்கவே கூடாதுனு மங்காத்தா பட டயலொக் வச்சி இருக்கீங்க தல ரசிகர்களையும் சேர்க்கணும்னா என்று கேட்க அதற்கு வெங்கட் அது என்னோட டயலொக் நான் தான் 2 படத்துக்கும் வச்சி இருக்கான் என்று கூறுகிறார். செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு இவர் இவ்வாறு பதில் கூறியது தற்போது வைரலாகி வருகிறது நமது இணையவாசிகளும் அதனை எடிட் செய்தும் ஷேர் செய்து வருகின்றனர்.  

Advertisement

Advertisement