• Nov 13 2025

DNA டெஸ்ட் தேவை இல்ல...நான் தான் குழந்தைக்கு அப்பா..! ஒத்துக்கொண்ட ரங்கராஜ்

Aathira / 1 week ago

Advertisement

Listen News!

மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை ஏமாற்றியதாக ஜாய் கிரிஸில்டா கொடுத்த புகாரை தொடர்ந்து அவர்கள் இருவரிடமும் மகளிர் ஆணையம் விசாரணைகளை நடத்தி வருகின்றது. பின்பு ஜாய் கிரிஸில்டாவுக்கு ஆண் குழந்தையும் பிறந்தது. 

மாதம்பட்டி ரங்கராஜ் ஜாய் கிரிஸில்டாவை ரகசியமாக திருமணம் செய்து கொண்டார். ஆனால் மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை விட்டு விலகுவதாக உணர்ந்த பிறகு தான் அவர் திருமணம் செய்து கொண்ட புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிடத் தொடங்கினார். 

ஒரு கட்டத்தில் மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை விட்டு விலகவே அவர் தன்னை ஏமாற்றியதாக என்னுடைய குழந்தைக்கு அவர்தான் தந்தை என்றும் காவல் ஆணையர் அலுவலகத்தில் ஜாய் கிரிஸில்டா புகார் கொடுத்தார். 


இந்த புகாரின் அடிப்படையில்  இருவரிடமும் விசாரணை நடத்தப்பட்டது.  இதனை சட்டரீதியாக எதிர்கொள்ளுவேன் என்று ஜாய் கிரிஸில்டாவுக்கு எதிராக மாதம்பட்டி  பதிவிட்டு இருந்தார். 

இந்த நிலையில்,  மாதம்பட்டி ரங்கராஜிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், ஜாய் கிரிஸில்டாவை இரண்டாவது திருமணம் செய்து கொண்டது உண்மைதான் என்றும், அவருக்கு பிறந்திருக்கும் குழந்தையும் என்னுடையது தான் என்றும் மாதம்பட்டி ரங்கராஜ் ஒப்புக் கொண்டுள்ளார். 

இதனால்  டிஎன்ஏ சோதனை போன்ற அடுத்த கட்ட நடவடிக்கை தேவையில்லை என்று குறிப்பிட்டுள்ளது. எனவே ரங்கராஜ் அந்த குழந்தைக்கு நான் தான் அப்பா என ஒத்துக்கொண்டதால் அடுத்த கட்டம் அவர் என்ன மாதிரியான செயலில் இறங்கப் போகின்றார் என்று தெரியவில்லை.  

ஜாய் கேட்டபடி மாதா மாதம் பணத்தை கொடுத்து விடுவாரா? இல்லை அவருடன் சேர்ந்து வாழ போகின்றாரா?  என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். 

Advertisement

Advertisement