• Jul 27 2024

இன்று ஸ்பெஷல் தினம்.. எதிர்பாராத ஆச்சரியம்.. திடீரென ‘கோட்’ போஸ்டரை வெளியிட்ட வெங்கட்பிரபு..

Sivalingam / 3 months ago

Advertisement

Listen News!

இன்று ‘கோட்’ படத்தில் நடித்த நடிகர் ஒருவருக்கு ஸ்பெஷல் தினம் என்பதை அடுத்து வெங்கட் பிரபு எதிர்பாராத ஆச்சரியமாக ‘கோட்’ படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்டுள்ள நிலையில் அந்த போஸ்டர் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

தளபதி விஜய் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் ‘கோட்’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் முக்கிய கேரக்டரில் நடித்திருக்கும் பிரபுதேவாவுக்கு இன்று பிறந்தநாள் என்பதை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

இந்த நிலையில் இன்று பிரபுதேவாவுக்கு ஸ்பெஷல் தினம் என்பதால் அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் வெங்கட் பிரபு ‘கோட்’ படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்டு தனது பிறந்த நாள் வாழ்த்துக்களையும் அதில் தெரிவித்துள்ளார். இந்த போஸ்டரில் பிரபுதேவா அட்டகாசமாக கையில் துப்பாக்கி வைத்திருக்கும் போஸ் உள்ளதை அடுத்து இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

இந்த நிலையில் ‘கோட்’ படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு ரஷ்யாவில் விரைவில் நடைபெற இருப்பதாகவும் இதற்காக விஜய் உள்பட படக்குழுவினர் இன்னும் ஒரு சில நாட்களில் ரஷ்யா செல்ல இருப்பதாகவும் கூறப்படுகிறது.

விஜய், பிரசாந்த், பிரபுதேவா, சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி, பார்வதி நாயர், மோகன், ஜெயராம், அஜ்மல், யோகிபாபு, விடிவி கணேஷ், வைபவ், பிரேம்ஜி, கஞ்சா கருப்பு உள்பட பலர் ’கோட்’ படத்தில் நடித்துள்ளனர்.  ஏஜிஎஸ் நிறுவனம் இந்த படத்தை பிரமாண்டமாக தயாரித்து வரும் நிலையில், யுவன்ஷங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார்.


Advertisement

Advertisement