• Sep 21 2024

பிரபுதேவாவுடன் இணைந்த வரலக்ஷ்மி.. மிரட்டும் "பொய்க்கால் குதிரை" பட ட்ரெய்லர்

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

இந்தியத் திரையுலகில் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக மட்டுமன்றி புகழ் பெற்ற நடனக் கலைஞராகவும் சிறந்து விளங்குபவர் நடிகர் பிரபுதேவா.

அதுமட்டுமன்றி இந்தியாவின் ‘மைக்கல் ஜாக்சன்’ எனவும் புகழப்பட்டு வருகின்றார்.

இவர் சினிமாவில் ஒரு நடன இயக்குநராக இருந்து 100 இற்கு மேற்பட்ட படங்களிற்கும், நடிகராக இருந்து 70 இற்கு மேற்பட்ட படங்களிலும், இயக்குநராக இருந்து 12 இற்கு மேற்பட்ட படங்களிலும் பணியாற்றியிருக்கின்றார்.

இவ்வாறு இருக்கையில் பிரபுதேவா, வரலக்ஷ்மி, பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் நடித்து இருக்கும் பொய்க்கால் குதிரை படத்தில் ட்ரைலர் தற்போது வெளிவந்து இருக்கிறது.

ஒரு காலை இழந்த நபராக பிரபுதேவா நடித்து இருக்கிறார். மகளை மிக அன்பாக வளர்த்து வரும் அவருக்கு மகள் தான் அடம்பிடித்து ஒரு பொய்க்காலை வாங்கி தருகிறார்.

அதன் பின் மகளுக்கு உடல்நிலை சரியில்லை என சிகிச்சைக்கு செல்ல, திடீரென காணாமல் போகிறார். அதன் பின் மகளை தேடி அலையும் பிரபுதேவா சந்திக்கும் சவால்கள் தான் இந்த படத்தின் கதை என்பது ட்ரைலர் பார்க்கும்போதே தெரிகிறது.

ட்ரெய்லர் இதோ

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement