• Sep 09 2024

வனிதா வீட்டிலிருந்து Bigg Boss இல் களமிறங்கும் முக்கிய நபர்... பதிவின் மூலம் உறுதியாகிய தகவல்..? இந்த சீசன் சூடு பிடிக்கப்போறது Confirm..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஒளிபரப்பாகும் ரியாலிட்ரி ஷோ தான் பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியானது ஏற்கெனவே 6சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. இவ்வாறாக பரபரப்புக்கும், விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லாத பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசன் விரைவில் தொடங்க உள்ளது. 


இந்த சீசனில் எந்தெந்த பிரபலங்கள் எல்லாம் கலந்து கொள்வார்கள் என்ற எதிர்பார்ப்பும் நாளுக்கு நாள் எகிறிய வண்ணம் தான் இருக்கின்றது. நாளுக்கு நாள் ஒவ்வொருவருடைய பெயர்களும் இணையத்தில் கசிந்த வண்ணம் தான் இருக்கின்றன. 


அந்தவகையில் தற்போது மற்றோர் நபரின் பெயரும் வெளியாகி இருக்கின்றது. அது வேறு யாரும் இல்லை நடிகையும், முன்னாள் பிக்பாஸ் போட்டியாளருமான வனிதா விஜயகுமாரின் மகள் ஜோவிகா தான். ஏற்கெனவே இவர் பிக்பாஸ் வீட்டில் நுழைய இருப்பதாக தகவல் வெளியாகி இருந்த நிலையில், தற்போது வனிதா வெளியிட்டுள்ள ஒரு பதிவு அதனை சற்று உறுதிப் படுத்தியுள்ளது.


அதாவது தனது இன்ஸ்டா பக்கத்தில் ஜோதிகாவின் புகைப்படத்தை பதிவிட்டு "என் உலக அழகி, உன்னை நேசிக்கிறேன், நீ என்ன செய்தாலும் இறைவன் உன்னை ஆசீர்வதிப்பாராக" எனக் குறிப்பிட்டு அவரை வாழ்த்தி இருக்கின்றார் வனிதா.

இதனைப் பார்த்த நெட்டிசன்கள் வனிதா மகள் ஜோவிகா பிக்பாஸ் போறது கன்போர்ம் எனக் கூறி வருகின்றனர். எது எவ்வாறாயினும் ஜோவிகா இந்த சீசனில் கலந்து கொள்கிறாரா இல்லையா என்பதை சற்றுப் பொறுத்திருந்து பார்ப்போம்.


Advertisement

Advertisement