• May 30 2025

கமலுக்கு எதிராக வெடித்த போராட்டம் ...!அதிர்ச்சியில் திரையுலகம்...!

Roshika / 1 day ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வருபவர் கமல் ஹாசன். இவர் பல  திரைப்படங்களில்  நடித்து ரசிகர்கள் மனதில் நீங்காதா  இடம் பிடித்துள்ளார். தற்போது "தக் லைஃப்" திரைப்படம் ஜூன் 5 ஆம் திகதி திரைக்கு வெளியாகும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட  நிலையில் "தமிழில் இருந்து தான்  கன்னடம் பிரிந்தது" எனக் கூறிய  கமல் ஹாசனுக்கு எதிராக பெரும் கண்டனங்கள் எழுந்துள்ளன. 

"தக் லைஃப்" திரைப்படம் மணிரத்தனம் இயக்கத்தில் கமல்ஹாசன்,சிம்பு, திரிஷா கிருஷ்ணன், சான்யா மல்கோத்ரா, அசோக் செல்வன்,அபிராமி , ஐஸ்வர்யா லட்சுமி, ஜோஜு ஜார்ஜ்  எனப் பல பிரபலங்கள் இந்த திரைப்படத்தில் நடித்துள்ளார்கள். இந்த திரைப்படத்திற்கு ஏ. ஆர். ரகுமான் இசையமைத்துள்ளதுடன் சில நாட்களிற்கு முன்பு இசை வெளியீட்டு நடைபெற்றிருந்தது.


இந்நிலையில்  திரைப்படத்தின்  புரொமோஷன் நிகழ்வுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில்  கமல்ஹாசன் கூறிய விடயம் ரசிகர்கள் மத்தியில் பெரும் சர்ச்சையாக  எழுந்துள்ளது . "தமிழில் இருந்து தான் கன்னடம் பிரிந்தது " என்று கூறியுள்ளார். இதனைப் பார்த்த ரசிகர்கள் மற்றும் கர்நாடகா மாநில  மக்கள் கமலஹாசனுக்கு எதிராக கண்டனம் தெரிவித்து வருவதுடன், 6.5 கோடி கன்னடர்களை காயப்படுத்தி விட்டதாக குற்றசாட்டுகளையும் முன்வைத்துள்ளனர் . 


மேலும் பா.ஜ.க. மாநில தலைவர் விஜயேந்திர எடியூரப்பா கண்டனம் தெரிவித்து வருவதுடன் போராட்டங்களிலும்  ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் "தக் லைஃப்" திரைப்படத்தினை கர்நாடகா மாநிலத்தில் வெளியிட்டுவதற்கு தடைவிதித்தும் , கமல்ஹாசனுடைய போஸ்ட்டர்களை கிழித்தும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இச் செய்தி ரசிகர்கள் மத்தியிலும் படக்குழு மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ரசிகர்கள் தங்கள் கருத்துக்களை சமூக வலைத்தளப்பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர். 



Advertisement

Advertisement