• Sep 26 2023

வடிவேலுவின் தம்பி இந்த தொழில் தான் செய்து வந்தாரா?- இதுவரை யாரும் அறிந்திடாத தகவல்- அண்ணன் மீது இவ்வளவு பாசம் கொண்டவரா?

stella / 4 weeks ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் இப்போதைய தலைமுறையினரும் விரும்பி ரசிக்கும் காமெடி நடிகர் தான் வடிவேலு. நீண்ட இடைவேளைக்குப் பிறகு மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்து சிறப்பான படங்களில் நடித்து வருகின்றார்.இப்படியான நிலையில் சில மாதங்களுக்கு முன்புதான் வடிவேலுவின் தாயார் உயிரிழந்தார்.

இதனை அடுத்து இன்று அவருடைய தம்பியும் தனது 54வது வயதில் உயிரிழந்துள்ளார்.அந்த வகையில் தற்பொழுது வடிவேலுவின் தம்பி குறித்த தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. அதாவது வடிவேலுவின் சொந்த ஊர் சிவகங்கை தானாம். அங்கு வடிவேலுவின் தந்தை கண்ணாடி கடை வைத்திருந்திருக்கிறார்.


பிறகு வேலை விஷயமாகத்தான் சிவகங்கையில் இருந்து மதுரையில் குடிபெயர்ந்து இருந்தார்களாம். வடிவேலுவின் உடன் கூட பிறந்தவர்கள் ஆறு சகோதர சகோதரிகளாம். அதில் வடிவேலு தான் மூத்தவராம்.வடிவேலுக்கு இரண்டு சகோதரிகள் இருக்கிறாராம். அவர்கள் இருவருக்குமே வடிவேல் தான் திருமணம் செய்து வைத்திருந்தாராம்.

 அதுபோல இன்று இறந்த வடிவேலுவின் சகோதரர் ஜெகதீஸ்வரருக்கும் வடிவேலு தான் முன் நின்று திருமணம் செய்து வைத்திருந்தாராம். சமீபத்தில் சில வருடங்களுக்கு முன்பு கூட வடிவேலுக்கும் அவருடைய சகோதரருக்கும் சொத்து தகராறு காரணமாக சில பிரச்சனைகள் எழுந்தது. இருப்பினும் தான் அளிக்கும் பேட்டிகளில் தன்னுடைய அண்ணனை எந்த இடத்திலும் விட்டுக் கொடுக்காமல் வடிவேலுவின் தம்பி ஜெகதீஸ்வரன் பெருமையாக பேசி இருக்கிறார்.

 அதுபோல வடிவேலுவின் தம்பி ஜெகதீஸ்வரன் "மலைக்கோவில் தீபம், காதல் அழிவதில்லை" என்ற ஒரு சில திரைப்படங்களில்  நடித்து இருக்கிறார். அதற்கு பிறகு தனக்கு சில வாய்ப்புகள் வந்தது. ஆனால் தான் அதில் நடிக்க முடியாமல் ஆகிவிட்டது என்று அந்த பேட்டியில் பேசியிருக்கிறார். அத்தோடு வடிவேலு சினிமாவிற்கு வருவதற்கு முன்பு தன்னுடைய தந்தை வைத்திருந்தது போலவே கண்ணாடி கடை தான் வைத்திருந்தாராம். 


ஆனால் சமீப காலமாக ரெடிமேடு ஷார்ட் வாங்கி விற்கும் பிசினஸ் செய்து வந்ததாக கூறியிருக்கிறார். அத்தோடு வடிவேலு சினிமாவில் மட்டுமல்லாமல் நிஜத்தில் வீட்டில் பேசிக் கொண்டிருக்கும் போது காமெடியாக தான் பேசுவார். அது எல்லோரையும் சிரிக்க வைக்கும். நான் நடிக்கவில்லை என்றாலும் அண்ணன் தொடர்ச்சியாக நடிப்பது சந்தோசம் தான். சில வருடங்களாக அண்ணன் நடிக்காமல் இருந்தார். இப்போது மீண்டும் நடிக்க தொடங்கி இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது என்று  ஒரு பேட்டியில் கூறியிருக்கின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement