• Feb 01 2023

தனது தாயாரின் இறப்பிற்கான காரணத்தை சொன்ன வடிவேலு...அடடே கடைசியில் இப்படி ஆகிடுச்சே..!

Listen News!
Aishu / 1 week ago
image

Advertisement

Listen News!

தனது தாயாரின் இறப்பு குறித்து வடிவேலு மனம் கலங்கி பேசி இருக்கும் வீடியோ தீயாய் பரவி வருகிறது.

தமிழ் திரையுலகில்  நகைச்சுவையில் ஜாம்பவனாக திகழ்பவர் வடிவேலு. இவர் திரைப்பட நடிகர் மட்டுமில்லாமல் பின்னணி பாடகரும் ஆவார். 1988ஆம் ஆண்டு டி ராஜேந்தர் இயக்கிய திரைப்படத்தின் மூலம் தான் இவர் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், வசூலையும் பெற்றுத் தந்திருக்கின்றது.

மேலும், இவர் தமிழில் ரஜினி, கமல், விஜய், அஜித், சத்யராஜ், பிரபு, விக்ரம் என அனைத்து முன்னணி நடிகர்களின் படத்திலும் நடித்து இருக்கிறார். அதுமட்டும் இல்லாமல் ஒவ்வொரு படத்திலும் இவருடைய கதாபாத்திரம் என்றென்றும் ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது. அத்தோடு, இவர் காமெடி நடிகராக மட்டும் இல்லாமல் ஹீரோவாகவும் படங்களில் நடித்து இருக்கிறார். அதிலும், இம்சை அரசன் 23ம் புலிகேசி படத்தின் வெற்றியை தொடர்ந்து 24ம் புலிகேசி படத்தை எடுக்க துவங்கினார் வடிவேலு.இந்த படத்தின் போது வடிவேலுக்கும், இயக்குனர் ஷங்கருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது. இதன் காரணமாக தயாரிப்பாளர் சங்கம் வடிவேலுவை படங்களில் நடிக்கக் கூடாது என உத்தரவு போட்டது. இதனால் பல வருடங்கள் வடிவேலு படங்களில் நடிக்காமல் இருந்தார். அத்தோடு கடந்த ஆண்டு தான் இந்த பிரச்சனை தீர்ந்தது. தற்போது வடிவேலு படங்களில் கமிட்டாகி வருகிறார். அந்த வகையில் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தில் நடித்து இருந்தார்.

ஆனால், இந்த படம் பெரும் தோல்வியை தழுவி இருந்தது. இப்படி ரீ – என்ட்ரி கொடுத்த படம் தோல்வியடைந்ததை நினைத்து சோகத்தில் இருந்த வடிவேலுவிற்கு தற்போது அடுத்த சோகமாக அவரது தாயார் காலமாகி இருக்கிறார். வடிவேலுவுடன் மொத்தம் பிறந்தவர்கள் 7 பேர். இதில் வடிவேலுவை தவிர வேறு யாரும் நல்ல நிலையில் இல்லை. மேலும், வடிவேலுவின் தாயார் மதுரையில் உள்ள வீரகனூர் என்ற கிராமத்தில் தான் வசித்து வந்தார். சென்னையில் இருக்கும் வடிவேலு மதுரை செல்லும் போது தனது தாயாரை சந்தித்து வருவார்.வடிவேலுவின் தாயார் வைத்தீஸ்வரி (எ) பாப்பா உடல்நலக்குறைவால் காலமாகி இருக்கிறார். அவருக்கு வயது 87. இவரது மரணம் குடும்பத்தினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வடிவேலுவின் தாயார் இறப்பிற்க்கு இரங்கல் தெரிவித்துள்ள முதலமைச்சர் ஸ்டாலின் ‘நடிகர் வடிவேலு அவர்களின் அன்புத்தாயார் திருமதி. சரோஜினி அம்மாள் என்கிற பாப்பா அவர்கள் மதுரை விரகனூரில் உடல்நலக்குறைவு காரணமாக இயற்கை எய்தினார் என்ற செய்தி அறிந்து மிகவும் வருத்தமுற்றேன். ஆளாக்கி அழகு பார்த்த அன்னையின் மறைவு என்பது எந்த ஒரு மகனுக்கும் ஈடுசெய்ய இயலாதஇழப்பாகும். ‘வைகைப் புயல்’ திரு. வடிவேலு அவர்களுக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும்’ தெரிவித்துகொண்டார்.மேலும் உடல்நிலை சரியில்லாமல் இருந்து என் அம்மா தெம்மாங்கு தான் இருந்தார்கள் மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு வந்தவுடன் மார்பு சளி காரணமாக திடீரென்று பல்ஸ் இறங்கி விட்டது. பொங்கலுக்காக தான் இங்கு ஊருக்கு வந்தேன். பொங்கல் முடியும் வரை யாரையும் அவர் தொந்தரவு செய்யவில்லை. மாடெல்லாம் புடிச்சுட்டு வாங்க அதுக்கப்புறம் தான் போவேன் என்று சொன்னார் எல்லாம் பண்டிகையையும் முடித்துவிட்டு யாருக்கும் தலை இல்லாமல் அந்த அம்மா சென்று விட்டாள்

Advertisement

Advertisement

Advertisement