• Apr 19 2024

ரோலக்ஸுக்கு இணையாக களமிறங்கும் சியான் விக்ரம்.! விக்ரம் 2 லேட்டஸ் அப்டேட் ...

Jo / 1 year ago

Advertisement

Listen News!

கடந்த ஆண்டு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி,சூர்யா, பஹத் பாசில், நரேன், காயத்ரி, ஷிவானி நாராயணன், மகேஸ்வரி, மைனா நந்தினி, உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் விக்ரம். இந்த திரைப்படம் கடந்த ஜூன் 3-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றதோடு, வசூலில் வெற்றி நடை போட்டது என்றே சொல்லலாம்.



இந்த படத்தில், ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் கெஸ்ட் ரோலில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் சூர்யா. ஆனால், முதலில் அந்த கதாபாத்திரத்தில் நடிகர் சியான் விக்ரம் தான் நடிப்பதாக இருந்ததாம். சில காரணங்களால் படத்தில் நடிக மறுத்துவிட்டாராம். இந்நிலையில் ‘விக்ரம் 2’ படத்தில் சீயான் விக்ரம் ஒரு முக்கியமான வேடத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.



‘விக்ரம் 2’ படத்தில் சீயான் விக்ரம் ரோலக்ஸ் கதாபாத்திரத்திற்கு இணையாக நடிக்கிறாரா இல்லையென்றால், வேறு மாதிரியான ஹீரோ கதாப்பாத்திரமா என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.



தற்போது, இயக்குநர் லோகேஷ் விஜய்யை வைத்து தளபதி 67 படத்தின் வேலையை தொடங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement

Advertisement